'மாநில அளவில் ரசிகர் மன்றம்'... சந்தானத்துக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன!!

By Shankar

காமெடியில் நிகரற்றவராக, இன்றும் திகழும் கவுண்டமணிக்கு ரசிகர் மன்றம் வைக்க எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் எவ்வளவோ முயன்றார்கள் பலர்.

ஆனால் கட்டாயம் இதை அனுமதிக்க மாட்டேன். எனக்கு அது தேவையும் இல்லை என்று கூறிவிட்டார் கவுண்டர்.

ஆனால் எல்லாரும் அப்படி இருந்துவிடுவார்களா என்ன...

Santhanam to start fans club

நகைச்சுவை நடிப்பில் கவுண்டரை அப்படியே காப்பி அடிக்கும் சந்தானம், ரசிகர் மன்ற விஷயத்தில் மட்டும் நேரெதிர் முடிவை எடுத்திருக்கிறார்.

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' பட வெளியீட்டின் போது மாநிலம் தழுவிய ரசிகர் மன்றத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.

காரணம், கடந்த இரு ஆண்டுகளாக சில மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அவரைச் சந்தித்து இதுபற்றிப் பேசி வந்ததுதான்.

அப்போதெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சந்தானம், இப்போது தான் ஹீரோவாக நடிக்கும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் ட்ரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பு, படத்தின் வியாபாரம் போன்றவற்றைப் பார்த்ததும், 'நாம இப்போ காமெடியன் இல்லையே.. ஹீரோதானே... அப்புறம் ரசிகர் மன்றம் தொடங்க ஏன் தயங்க வேண்டும்?' என்று தன்னுடன் இருக்கும் நண்பர்களைக் கேட்டாராம்.

அவர்களும் அதுவும் சரிதான், என்று கூற... முடிவே பண்ணிவிட்டார் சந்தானம்.

'இப்போ ரசிகர் மன்றம்... அடுத்து?' - சந்தானத்தை உசுப்பேத்த ஆட்களுக்கா பஞ்சம்!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X