அஜித்குமார் அப்படி பேசியது அதுதான் கடைசி.. சந்தானம் ஓபன் டாக்
சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பைதான் பெற்றது. குட் பேட் அக்லியை பொறுத்தவரை அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் விமர்சன ரீதியாக படம் பலத்த அடியை சந்தித்தது. இருப்பினும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது. இந்நிலையில் அஜித் குறித்து சந்தானம் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில்ட் ரெண்டாகியிருக்கிறது.
அஜித்குமார் இந்த வருடத்தில் இரண்டு படங்கள் நடித்திருக்கிறார். ஒரே வருடத்தில் அவரது இரண்டு படங்கள் வெளியாவது நீண்ட காலத்துக்கு பிறகு இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் விடாமுயற்சி படம் ஏகே ரசிகர்களை கவரவில்லை. அஜித்துக்கு மாஸ் சீன்களே இல்லை என்பதால்தான் அந்தப் படத்தை அவர்கள் ரசிக்கவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.
குட் பேட் அக்லி: அதேசமயம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி திரைப்படம் ஏகே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் இயக்குநரே அடிப்படையில் அஜித்தின் ரசிகர் என்பதால்; ஒரு பக்கா ஃபேன் பாய் படமாக அதனை எடுத்திருந்தார். ஆனால் படத்தின் கதை அரத பழசான கதைதான். அதேபோல் திரைக்கதையிலும் பெரிய சுவாரசியம் இல்லை. இதன் காரணமாக பொதுவான ரசிகர்களுக்கு படம் ப்டிக்கவில்லை.

ஓவர் டோஸ் ஆதிக்: மேலும் படம் முழுக்க அஜித் நடித்த பழைய படங்களின் ரெஃபரன்ஸ்களை வைத்திருந்தார். அது கொஞ்சம் இல்லை நிறையவே ஓவர் டோஸ் ஆகிவிட்டது. ஒருகட்டத்தில் சலிப்பும் தட்ட ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரெட்ரோ பாடல்களை பயன்படுத்துகிறேன் என்கிற பெயரில் சம்பந்தமே இல்லாமல் ப்ளேஸ் செய்திருக்கிறார். இதெல்லாம் எதற்கு என்றே தெரியவில்லை என பொதுவான ரசிகர்கள் கூறினார்கள். எது எப்படியோ படம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டு மொத்தம் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறதாம்.
அடுத்த படம்: அடுத்தும் அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் படம் இயக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஏகே நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. இன்னொரு சர்ப்ரைஸாக தனுஷ் சமீபத்தில் சந்தித்து அஜித்திடம் கதை சொன்னதாக ஒரு தகவல் ஓடியது. ஆனால் அஜித்தை தனுஷ் இயக்குவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதுதான் பெரும்பாலான திரைத்துறையினரிடம் கருத்தாக இருக்கிறது.
அஜித்தின் பாலிசி: இதற்கிடையே அஜித்குமார் ஊடகங்களை சந்தித்து பேட்டி கொடுப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. அதற்கு காரணங்களாக பல்வேறு விஷயங்கள் சொல்லப்படுகிறன்றன. சூழல் இப்படி இருக்க பத்மபூஷன் விருது பெற்றதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். தமிழை பொறுத்தவரை அவர் கடைசியாக பில்லா, அசல் பட சமயத்தில்தான் பேட்டி கொடுத்திருந்தார். அதில் ஒரு பேட்டி சந்தானம் எடுத்தது.
சந்தானம் பேட்டி: இந்நிலையில் அந்தப் பேட்டி குறித்து சமீபத்திய நேர்காணலில் சந்தானம் நினைவுகூர்ந்திருக்கிறார். சந்தானம் கொடுத்த பேட்டியில், "திடீரென ஒருநாள் அஜித் எனக்கு ஃபோன் செய்து சந்தானம் ஒரு பேட்டி எடுக்க முடியுமா என்று கேட்டார். உடனே நான், ஓகே அண்ணா யாருக்கு என்று கேட்டேன். அதற்கு அவர் நான்தான் பேட்டி கொடுக்கலாம் என்று இருக்கிறேன் என கூறினார். எனக்கு ஆச்சரியம். பிறகு ஓகே சொல்லிவிட்டேன். அந்தப் பேட்டியில் செம ஜாலியாக பேசினார்.அந்தப் பேட்டிதான் அவர் அப்படி பேசியது முதலும் கடைசியும் என நினைக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











