சும்மா சில்லு சில்லுன்னு.. கையில் சூலத்துடன் வடக்குப்பட்டி ராமசாமி.. சந்தானம் செம மாஸா இருக்காரே!

சென்னை: சந்தானத்தை வைத்து டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி மீண்டும் சந்தானத்துடன் கூட்டணி வைத்துள்ள படத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமி என டைட்டிலேயே தாறுமாறாக வைத்துள்ளார். டிக்கிலோனா திரைப்படமே டைம் டிராவல் படமாக வெளியாகி காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் தூள் கிளப்பியிருக்கும். இந்நிலையில், வடக்குப்பட்டி ராமசாமி படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள நிலையில், அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்று முன் சந்தானம் வெளியிட்டுள்ளார்.

காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறிய சந்தானம் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு சில படங்கள் அவருக்கு ஹிட் அடித்து வரும் நிலையில், பல படங்கள் பெரிதாக வொர்க்கவுட் ஆகாமல் போய் விடுகின்றன. ஆனால், தனது தனித்துவமான நகைச்சுவையால் தொடர்ந்து ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறார்.

Santhanams Vadakkupatty Ramasamy first look poster out now

டிடி ரிட்டர்ன்ஸ் செம ஹிட்: கடந்த ஆண்டு சந்தானத்துக்கு ஜாக்பாட் அடித்தது போல டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. ஆண்டு இறுதியில் டாப் 10 வசூல் படங்களில் பல திரையிரங்குகளில் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. கிக் மற்றும் 80ஸ் பில்டப் படங்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

வடக்குப்பட்டி ராமசாமி: இந்நிலையில், இந்த ஆண்டு மீண்டும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க பிப்ரவரி 2ம் தேதி வடக்குப்பட்டி ராமசாமி படத்தை வெளியிட உள்ளார் சந்தானம். டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. சும்மா சில்லு சில்லுன்னு வரோம் என சந்தானம் செம மாஸாக ட்வீட் போட்டு வடக்குப்பட்டி ராமசாமி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

கையில் சூலத்துடன்: மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா கையில் சூலத்தை வைத்து நின்றதை போல நடிகர் சந்தானம் கையில் பெரிய சூலத்துடன் வானத்தைப் பார்த்து மஞ்சள் சட்டை, பட்டு வேட்டியில் பக்காவாக போஸ் கொடுத்து உள்ள ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை பார்த்த உடனே கவர்ந்து விடுகிறது.

இதுலயும் ரீமேக் பாட்டு இருக்கா: கவுண்டமணியின் ஃபேவரைட் காமெடியான வடக்குப்பட்டி ராமசாமியை டைட்டிலாக வைத்து உருவாக்கி உள்ள இந்த படத்தில் டிக்கிலோனா படத்தில் "பேரு வச்சாலும் வைக்காமல் போனாலும் மல்லி வாசம்" பாடல் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில், இந்த படத்திலும் அதுபோல ஏதாவது தரமான சம்பவம் இருக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X