இசைக்கலைஞர் தனுஷ்… இது புதுசா இருக்கே…!
தனுஷை இசைக்கலைஞர் என சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.
சென்னை: வட சென்னை படத்தில் தனுஷ் இசையிலும் புதிய அத்தியாயத்தை தொட்டுள்ளதாக தெரிகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மூன்றாவதாக நடித்துள்ள படம் வட சென்னை. அக்டோபர் மாதம் 17ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சமீபத்தில் வெளியான வடசென்னை டீசரும் பெரிதும் பேசப்பட்டதாலும் மூன்றாவது முறையாக வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி என்பதாலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் ட்வீட் தனுஷ் இப்படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் வேறு என்னவெல்லாம் செய்திருப்பாரோ என யோசிக்க வைக்கிறது.
வடசென்னை தொடர்பாக அப்டேட் கொடுங்கள் என நிறைய மெஸ்ஸேஜ்கள் வந்துகொண்டே இருக்கிறது. மிகச் சிறப்பான, பயனுள்ள பல விஷயங்கள் அடங்கிய ஒரு ஆல்பத்தை உருவாக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். மிக விரைவில் பாடல் வெளியீட்டு தேதியை அறிவிப்போம். இசைக்கலைஞர் தனுஷின் பங்கும் இதில் சேர்ந்துள்ளது என ட்வீட் செய்துள்ளார்.
இவர் சொல்வதை வைத்து பார்க்கும்போது இப்படத்தில் தனுஷ் இசைக்கருவி ஏதாவது வாசித்துள்ளாரா அல்லது ஒரு பாடலுக்கு இசைக்கோர்வை செய்துள்ளாரா எனக் கேள்வி எழுகிறது.


Click it and Unblock the Notifications











