விஜய் படத்தை ரகசியமாக பார்த்த அஜித்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா?

சென்னை: விஜய்யும், அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர். அதன் பிறகு இரண்டு பேருமே சேர்ந்து நடிக்கவில்லை. இருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்களின் விருப்பமாகவே இருக்கிறது. ஆனால் இரண்டு பேருமே அதை ஏனோ சில காரணங்களால் தவிர்த்துவருகின்றனர். இந்தச் சூழலில் விஜய் நடித்த படத்தை அஜித் இயக்குநர் சரணுடன் ரகசியமாக பார்த்த விஷயம் குறித்து தெரியவந்திருக்கிறது.

இந்திய சினிமாவில் அஜித்தும், விஜய்யும் டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கின்றனர். இருவரும் ஒரேகாலகட்டத்தில் நடிக்க வந்தவர்கள். அதேபோல் தங்களது ஆரம்பகாலத்தில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக போராடியவர்கள். விஜய் உருவ கேலியை சந்தித்தார் என்றால்; ஒழுங்காக தமிழே பேசவரவில்லை, எமோஷன் காட்சிகளில் நடிக்க தெரியவில்லை, நடனம் தெரியவில்லை போன்ற விமர்சனங்களையும் கேலிகளையும் அஜித் சந்தித்தார்.

Saran has said that Ajith secretly watched Vijay starrer Villu

ராஜாவின் பார்வையிலே: இரண்டு பேரும் இப்போது இருக்கும் இடம் சாதாரணமாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. அயராது உழைத்து, தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டனர். அதன் பிரதிபலனாக இருவருமே இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றனர். 90களில் நடிக்க வந்த அஜித்தும், விஜய்யும் ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு பிறகு நேருக்கு நேர் படத்தில் நடிக்க அஜித் கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் பாதியில் படத்திலிருந்து வெளியேறினார்.

அஜித் Vs விஜய்: அதற்கு பிறகு இருவரையும் சேர்த்து படம் எடுக்க யாருமே முயற்சிக்க கூட இல்லை. அதேசமயம் இருவரும் தங்களது பாதையில் சிறப்பாக செல்ல இருவருமே உயர்ந்த இடத்துக்கு சென்றனர். இதனால் ரஜினி - கமல் என்பது போல் அஜித் - விஜய் என உருவானது. இருவருக்குமே ரசிகர்கள் பெருக இரண்டு பேரின் படமும் ஒரே நாளில் ரிலீஸானால் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரசிகர்களுக்குள்ளும் மோதல் ஆரம்பித்தது. கடைசியாக விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் வெளியானது. இதில் துணிவு படம் வெற்றி பெற்றதாகவே பலரும் கூறினார்கள்.

ஆசைப்பட்ட விஜய்: இரண்டு பேருக்கும் போட்டி என்ற நிலைதான் இருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளுக்குள் ஆசை இருப்பதாகவே தெரிகிறது. அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தை பார்த்துவிட்டுக்கூட வெங்கட் பிரபுவிடம் பேசிய விஜய்; என்னிடம் சொல்லியிருந்தால் அர்ஜுன் கேரக்டரை நானே நடித்திருப்பேன் என சொல்லியிருக்கிறார். இதனை வெங்கட் பிரபுவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

ரகசியமாக பார்த்த அஜித்: இந்நிலையில் விஜய்யின் படத்தை அஜித் ரகசியமாக பார்த்த விஷயம் தெரியவந்திருக்கிறது. அதன்படி பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த வில்லு படத்தை; தன்னுடைய ஃபேவரைட் இயக்குநர் சரணுடன் சேர்ந்து சென்னையில் ஒரு தியேட்டரில் மாறு வேடத்தில் சென்று பார்த்தாராம். பார்த்ததோடு மட்டுமின்றி படம் பார்க்கையில் சில காமெடி காட்சிகளுக்கு விழுந்து விழுந்து சிரித்து கொண்டாடினாராம். இதனை இயக்குநர் சரண் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X