அந்த நடிகையின் மடியில் நான் படுக்க வேண்டும்.. ஓபனாக பேசிய தனுஷ்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் அவரது 50ஆவது படமாகும். அப்படத்தை அவரே இயக்கியிருந்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்திருக்கும் அவர் இட்லி கடை என்ற படத்தை அவரே இயக்கி நடித்துவருகிறார். இதற்கிடையே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். அந்தப் படம் 21ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
தனுஷ் திறமைவாய்ந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் ஆகிய திரைத்துறைகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை அவர் ஏற்படுத்திவருகிறார். இதனால் இந்திய திரையுலகமே தனுஷை கொண்டாடிவருகிறது. அவரது நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அப்படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். அது அவரது 50ஆவது படமும்கூட. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் மோசமான தோல்வியை சந்தித்தது. மேலும் கடுமையான ட்ரோலையும் சந்தித்தது.

குபேரா: ராயன் படத்தை முடித்திருக்கும் அவர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவர் நடித்த வாத்தி படம் தோல்வியடைந்ததால் இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு இயக்குநரோடு கூட்டணி அமைத்து வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் முழுமூச்சாக உழைத்திருக்கிறார் அவர்.
அடுத்தடுத்த படங்கள்: தனுஷின் கைகளில் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. போர்தொழில் இயக்குநருடன் ஒரு படம், அமரன் பட இயக்குநருடன் ஒரு படம், மாரி செல்வராஜுடன் ஒரு படம், வெங்கி அட்லூரியுடன் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு படம் என படு பிஸியான லைன் அப்பை வைத்திருக்கிறார். மேலும் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்தும்வருகிறார்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: இதற்கிடையே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார் அவர். அதில் அவரது சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை சரண்யா, "எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நாயகன் படத்தில் நடித்தபோது நிறைய பேர் அதுகுறித்து பேசினார்கள். அதுபோல் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடித்தது குறித்தும் பேசுகிறார்கள்.
தனுஷின் அம்மா: என்னை பார்க்கும் எல்லோரும் தனுஷின் அம்மா என்றுதான் கூறுவார்கள். இந்தப் படத்தில் பவிஷ் எனக்கு மகனாக நடித்திருக்கிறார். ஒரு சீனில் பவிஷ் எனது மடியில் படுக்க வேண்டும். அப்போது தனுஷ் பவிஷிடம், அது நான் படுக்க வேண்டிய இடம் என்று கூறினார். அதில் அவருடைய பொறாமையை பார்த்தேன். தனுஷை எல்லோரும் மல்டி டாஸ்க் திறமை கொண்டவர் என்று சொல்வார்கள். அதைவிடவும் அவரிடம் நிறையவே ஒழுக்கம் இருக்கிறது. அது பலரிடம் இருக்காது. அதை கண்டு நான் வியந்திருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











