»   »  கேப்டனுக்கு சரத் டோஸ்

கேப்டனுக்கு சரத் டோஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்னும் ஒரு வருடத்துக்கு சினிமாவில் தீவிரம் கவனம் செலுத்துவது, அதற்குப் பிறகுதான் மற்றவை எல்லாம் என்று தீர்மானம் செய்துள்ளாராம்சரத்.

முதலில் பத்திரிக்கையில் விளம்பரப் பிரதிநிதியாக வேலை, பிறகு தயாரிப்பாளர் அவதாரம், அப்படியே வில்லன் வேடம், அடுத்து ஹீரோ எனபடிப்படியாக உயர்ந்தவர் சரத்குமார்.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு கனபாடியான நடிகர் என்ற பெருமைக்கும் உரியவர். ஆரம்பத்தில் அதிமுகவுக்கு நெருக்கமாக இருந்தார். நாட்டாமைபடம் நன்றாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் கேட்காமல் கொள்ளாமல் ஜெஜெ டிவியில் போட்டதால் திமுகவுக்குத் தாவினார். நீண்ட காலம்திமுகவில் இருந்தவர், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு அதிமுகவுக்கு வந்தார். இப்போது அதிலிருந்தும் விலகி விட்டார்.

அடுத்து புதியக் கட்சியைத் தொடங்கப் போகிறார் சரத் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால் இன்னும் ஒரு வருடத்துக்கு எந்தமுடிவையும் எடுக்கப் போவதில்லையாம் சரத். சூப்பர் ஹிட் படம் ஒன்றைக் கொடுத்து விட்டுத்தான் அடுத்த அதிரடியைக் கொடுக்கப் போகிறாராம்.

அதிகம் எதிர்பார்த்த, 100வது படமான தலைமகன் சரியாக போகாதது சரத்துக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இதனால் அடுத்து ஒரு மெகாஹிட் படத்தைக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். இதற்காக தன்னை பெ>ய லெவலுக்கு உயர்த்திய கே.எஸ்.ரவிக்குமாரைஅணுகியுள்ளார். சரத்தை மட்டுமல்ல மேலும் பலரைத் தூக்கி விட்டவர் ரவிக்குமார்.

சரத்தை வைத்து படம் இயக்க ரவிக்குமாரும் ஒத்துக் கொண்டுள்ளார். இப்போது வைத்தீஸ்வரன் படத்தில் நடித்து வரும் சரத் அதை முடித்து விட்டுபுதிய படத்தில், ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம்.

ரவிக்குமார், சரத் இணையும் படம் நாட்டாமை, நட்புக்காக போல அட்டகாசமான கதையுடன் இருக்குமாம். இதுகுறித்து சரத்தை ஒரு கேசட்வெளியீட்டு விழாவில் சந்தித்து கேட்டபோது உற்சாகமாக பேசினார்.

தமிழ் மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். நான் இன்று இருக்கும் நிலைக்கு அவர்கள்தான் காரணம். இருந்தாலும் இப்போதைக்குகட்சி ஆரம்பிக்கப் போவதில்லை. பொருத்தமான நேரம் வரட்டும் பாஸ், அதுவரைக்கும் நோ கட்சி என்றார் சரத்.

தலைமகன் தோல்வி பாதிப்பைக் கொடுத்ததா?

ஒருபோதும் கிடையாது. மக்கள் மனதில் அப்படத்தின் கருத்து போக வேண்டும் என்று நினைத்தேன். அது சரியாகப் போய் விட்டது. நான் புதுமுகஇயக்குநர் (தலைமகனை சரத்தான் இயக்கினார்) என்ற வகையில் அப்படம் எனக்கு வெற்றிப் படம்தான். 100 வது நாளை தலைமகன் எட்டியுள்ளதுசந்தோஷம் தருகிறது.

காக்கி படம் என்னாச்சு?
அதை கைவிட்டாச்சு.
ரெய்டு பாலிடிக்ஸ்..?
சில அரசியல்வாதிகள், பொதுமக்களுக்காக சொத்துக்களை இழக்க தயார் என சவால் விடுகின்றனர். ஆனால் நடைமுறையில் யாரும் அப்படிஇருப்பதில்லை. உண்மையிலேயே பணத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்றால், அரசின் நடவடிக்கைகளைத் தடுக்க அவர்கள் என்நீதிமன்றங்களை அணுக வேண்டும்?

வருமான வரி சோதனை என்பது ஆசிட் டெஸ்ட் போன்றது. அந்த சோதனைக்கு நான் எப்போதும் தயார். எனது மடியில் கனமில்லை எனவேபயமும் இல்லை என்று புன்னகையுடன் கூறினார் சரத்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil