»   »  மும்தாஜ்-சரத் ஜோடி!

மும்தாஜ்-சரத் ஜோடி!

Subscribe to Oneindia Tamil

முதல் முறையாக மலையாளப் படம் ஒன்றில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கவுள்ளார் சரத்குமார். சரத்துக்கு ஜோடியாக மும்தாஜ் நடிக்கிறார்.

தமிழில் 100 படங்களை முடித்து விட்ட சரத்துக்கு 101வது படமாக பச்சைக்கிளி முத்துச்சரத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படம்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இயக்குநர் கெளதம், ஜோதிகா.

இந்த நிலையில் முதல் முறையாக மலையாளப் படம் ஒன்றில் நடிக்க சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் மம்முட்டியும் நடிக்கிறார்.படத்திற்கு பழசி ராஜா என்று பெயரிட்டுள்ளனர்.

தமிழில் பிரபல ஹீரோக்களான கமல், விக்ரம் ஆகியோர் மலையாளத்தில் நிறையப் படங்களில் நடித்துள்ளனர். இருவரும் சொந்தக் குரலிலேயேபேசி நடத்தியவர்கள்.

இதேபோல சிவாஜி கணேசன் சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். பிரபுவும் மலையாளத்தில் நடித்துள்ளார். பிரசாந்த் கூட ஒரு படத்தில்நடித்துள்ளார். அஜீத்தும் கூட தலை காட்டியுள்ளார்.

இந்த நிலையில் முதல் முறையாக சரத்குமார் மலையாளத்துக்கு நுழைகிறார். வழக்கமாக மலையாளப் படங்களில் தமிழ் ஹீரோக்களுக்கு (கமலைத்தவிர) பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்காது. 2வது ஹீரோவாகவோ அல்லது சின்ன கேரக்டரிலோதான் நடிக்க வைப்பார்கள்.

இந்த நிலையில் சரத்குமாருக்கு, மம்முட்டிக்கு இணையான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுக் கதையான இதில்,சரத்துக்கும், மம்முட்டிக்கும் சமமான அளவில் கதையை பின்னியுள்ளனராம்.

பழசி ராஜா கேரக்டரில் மம்முட்டியும், வெள்ளிச்சந்து என்ற பாத்திரத்தில் சரத்தும் நடிக்கிறார்கள். சரத்துக்கு இதில் ஜோடி மும்தாஜ். அவர் ஏற்கனவேஓரிரு மலையாளப் படங்களில் திறமை காட்டியுள்ளார். படப்பிடிப்பு தொடங்கி விட்டதாம். ஓணம் பண்டிகைக்கு படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமாம்.

மலையாள ரீமேக்கிலும், மலையாள நடிகர்களுடனும் சரத்குமார் தமிழில் நடித்துள்ளார். முதல் முறையாக அவர் நேரடி மலையாளப் படத்தில்நடிக்கவுள்ளார் என்பதால் இந்தப் படம் குறித்தும், அவரது கேரக்டர் குறித்தும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil