twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு கட்சியும் வேண்டாம்: சரத் கும்பிடு!

    By Staff
    |

    இனிமேல் எந்த அரசியல் கட்சியிலும் நான் சேர மாட்டேன். அதனால் ஒரு பயனும் இல்லை என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

    ஆரம்பத்தில் அதிமுக, பிறகு திமுக, நீண்ட கால திமுக வாசத்திற்குப் பின்னர் மறுபடியும் அதிமுக, பின்னர் திடீரென அதிலிருந்து விலகி அமைதிஎன சரத்குமாரின் அரசியல் வாழ்க்கையில் ஏகப்பட்ட ஹேர்பின் பெண்ட் திருப்பங்கள்.

    சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகிய பின்னர் நீண்ட அமைதி காத்து வந்த சரத், புதுக் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்திகள் கசிந்தன. ஆனால்அதை அவர் ஆணித்தரமாக மறுக்கிறார்.

    அதிமுகவிலிருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து மனம் விட்டுப் பேசினார் சரத். தனது அடுத்த கட்டநடவடிக்கைகள் குறித்து விலாவாரியாக விளக்கினார்.

    இனிமேல் எந்தக் கட்சியிலும் சேருவதில் அர்த்தம் இல்லை. திமுகவுடன் 10 ஆண்டு காலம் இருந்தேன். என்னால் முடிந்த வரை சிறப்பாகசெயலாற்றினேன். அதிமுகவுடன் குறுகிய காலம் இருந்தேன். இப்போது எனக்கு அரசியலில் எந்த விருப்பமும் இல்லை.

    புதுக் கட்சி ஆரம்பிக்கப் போகிறீர்களா என்று எல்லோரும் என்னைக் கேட்கிறார்கள். இப்போதைய சூழ்நிலையில் இன்னும் ஒரு கட்சி தேவையா?நான் அப்படி நினைக்கவில்லை.

    கொஞ்ச நாள் அமைதியாக, சந்தோஷமாக சினிமாவை அனுபவிக்க நினைக்கிறேன். அதற்காக கட்சி ஆரம்பிக்க நான் பயப்படுகிறேன் என்றுநினைத்து விடாதீர்கள்.

    என்னைப் பொருத்தவரை இப்போது கட்சி ஆரம்பிக்க சரியான நேரம் இல்லை என்று நினைக்கிறேன். எனவேதான் சினிமாவில் முழுகவனத்தையும் திருப்ப முடிவு செய்துள்ளேன். அதேசமயம், வழக்கம் போல நலிந்தவர்களுக்கு நான் உதவிகளையும் தொடர்ந்து செய்வேன்.

    காமராஜர் நினைவிடம்:

    பெருந்தலைவர் காமராருக்கு அவர் பிறந்த ஊரான விருதுநகரில் நினைவிடமும், வெண்கலச் சிலையும் அமைக்க திட்டமிட்டுள்ளேன். இதற்காகவிருதுநகர் அருகே 22 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளேன். இதில் அரசியலோ, ஜாதிய உணர்வோ எதுவும் இல்லை.

    இந்த நினைவிடத்திற்கான முழுச் செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். மாபெரும் தலைவர் ஒருவருக்கு ஒரு தமிழனாக இதை நான்செய்வதில் பெருமை அடைகிறேன்.

    திரையுலகில் நான் ஏற்றத்தையும் சந்தித்துள்ளேன், இறக்கத்தையும் பார்த்துள்ளேன். ஆரம்பத்தில் சில சறுக்கல்கள் இருந்தன. ஆனால் எனது எந்தப்படமும் தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்தவில்லை. எனது படம் தொடர்பாக யாரும் வருத்தப்படவில்லை, புகாரும் கூறவில்லை.

    அடுத்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படத்தை இயக்க மடிவு செய்துள்ளேன். அதற்கு தோதானதயாரிப்பாளர் இதுவரை கிடைக்கவில்லை. கிடைக்காதபட்சத்தில் நானே படத்தைத் தயா>ப்பேன்.

    இப்போதைக்கு 7 படங்களில் நடிக்க புக் ஆகியுள்ளேன். பச்சைக்கிளி முத்துச்சரம் வெளியாகவுள்ளது. இப்படம் எனது ரசிகர்களுக்குவித்தியாசமான அனுபவமாக இருக்கும். அந்தக் கேரக்டராகவே நான் வாழ்ந்துள்ளேன்.

    அடுத்து வைத்தீஸ்வரன் வரவுள்ளது. பிறகு 1977 என்ற படம். இதுதவிர கனகரத்தினா மூவிஸ், ஆர்.பி.செளத்ரி, கெளதம் மேனன், ராடன் மீடியா,லட்சுமி மூவி மேக்கர்ஸ் ஆகியோருடைய படங்களில் புக் ஆகியுள்ளேன்.

    நான், கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.பி.செளத்ரி இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளோம். மீண்டும் நாங்கள் இணைகிறோம்.இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறேன்.

    இதுதவிர மலையாளப் படம் ஒன்றிலும் நான் முதல் முறையாக நடிக்கள்ளேன். மம்முட்டியும் அதில் நடிக்கிறார்.

    நடிகர் சங்க புதிய கட்டட வளாகத்திற்கு மே மாதம் அடிக்கல் நாட்டப்படுகிறது என்றார் சரத்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X