காலத்துக்கேற்ப மாறிய சரத்... குணச்சித்திர வேடங்களுக்கு முக்கியத்துவம்!
காலத்தின் மாறுதலை உணர்ந்து தனது வேடத் தேர்வை மாற்றிக் கொள்வதில் இப்போதைக்கு சரத்குமார் முதலிடத்தில் நிற்கிறார்.
ஒரு காலத்தில் பாக்ஸ் ஆபீஸில் கொடிகட்டிப் பறந்த அவர், தொடர் தோல்விகள் மற்றும் ரசனை மாற்றத்தை உணர்ந்து குணச்சித்திர வேடங்களில் இறங்கினார்.

பழசி ராஜா
மலையாளம் மற்றும் தமிழில் வந்த பழசிராஜாதான் சரத் குணச்சித்திர வேடத்தில் நடித்த முதல் படம். அது மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமல்ல, சரத்துக்கு மலையாளத்தில் தனி மார்க்கெட்டையே உருவாக்கியது.

காஞ்சனா
அப்படி அவர் நடித்த காஞ்சனா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சரத்குமாரின் வேடமும் பேசப்பட்டது. கேரக்டர் ரோல் என்றாலும் படத்தின் நாயகன் சரத்தான் என்றார் இயக்குநர் லாரன்ஸ்.

கோச்சடையானில்..
இப்போது ரஜினியுடன் கோச்சடையானில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார சரத்குமார். ரஜினியின் படைத் தளபதியாக அவர் வருகிறார்.

நிமிர்ந்து நில்
அடுத்து நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கிறார். சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிபிசிஐடி அிகாரி வேடத்தில் வருகிறார் சரத்குமார்.

தமிழ் - தெலுங்கில்...
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சரத்குமாரே நடிக்கிறார். சரத்குமார் சம்மந்தப்பட்ட காட்சிகள் வரும் 15ம் தேதி முதல் படமாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமலா பால்
ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி வரும் இந்தப் படத்தில் தமிழில் ஜெயம் ரவியும், தெலுங்கில் நானியும் நடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











