ஹீரோ .. ஹீரோ ..
சென்னை:
தன் பெயரை தவறான முறையில் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என தன் அண்ணன் சுதர்சனை நடிகர் சரத்குமார் கடுமையாகஎச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் சரத்குமார் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாதி, இன, மத வேறுபாடு இல்லாமல் நான் பாடுபட்டு வருகிறேன்.
ஆனால், ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு என் சகோதரர் சுதர்சன் தலைமை ஏற்றுள்ளார். அது அவரது சொந்த விருப்பம். ஆனால் அவரது சொந்தலாபத்துக்காக என் பெயரை பயன்படுத்துவது தவறு.
நான் நடித்து வெற்றி பெற்ற நாட்டாமை, சூர்யவம்சம் என்ற சினிமாக்களின் பெயரை தன் சுய லாபத்துக்காக பயன்படுத்தவது தவறு. நான் சரத்குமாரின்அண்ணன் என என் பெயரை தவறாக பயன்படுத்தக் கூடாது.
என் அண்ணனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளேன். இந்த அறிக்கை மூலம் அதை மேலும் வலியுறுத்துகிறேன்.
இதையும் மீறி என் பெயரை பயன்படுத்தினால் அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன் என்று தனது அறிக்கையில்சரத்குமார் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











