ஹீரோ .. ஹீரோ ..

By Staff

செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமாருக்கு சென்னை நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

பிரபல திமுக ராஜ்யசபா எம்.பியுமான சரத்குமார் சென்னை-செளகார்பேட்டையில் உள்ள கலடா நிதி நிறுவனத்தில்ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார்.

இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ.58,000 வீதம் நான்கு முன் தேதியிட்ட செக்குகளை அந்த நிதிநிறுவனத்திடம் சரத்குமார் கொடுத்திருந்தார்.

ஆனால் இந்தச் செக்குகள் வங்கிக்கு அனுப்பப்பட்டபோது, அங்கு பணம் இல்லாத காரணத்தால் அவை திரும்பிவந்தன.

இதையடுத்து சென்னை-ஜார்ஜ் டவுனில் உள்ள 16வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கலடா நிதிநிறுவனத்தைச் சேர்ந்த ரவி என்பவர் புகார் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்தப் புகார் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி அலமேலு நடராஜன் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யஉத்தரவிட்டார்.

மேலும் வரும் 6ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சரத்குமாருக்கு சம்மன் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X