சிலந்தியில் சரத் இல்லை! சிலந்தி படத்திலிருந்து சரத்குமார் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் சூர்யாஅல்லது விக்ரம் நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தை கெளதம் மேனன் இயக்கிவருகிறார். இந்தப் படத்திற்கு முன்பாக அவர் ஒப்பந்தமான படம்தான் சிலந்தி. கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தை இயக்கித் தருமாறு தாணுகேட்டுக் கொண்டார். அவரது தயாரிப்பில் ஏற்கனவே கெளதம் இயக்கிய காக்க காக்கசூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் கெளதம் மீது தாணுவுக்கு தனி மரியாதையே உண்டு.எனவே தனது அடுத்த படத்தை இயக்கித் தருமாறு தாணு கேட்டபோது அதைகெளதமால் மறுக்க முடியவில்லை. வேட்டையாடி விட்டு சிலந்தியைப் பிடிப்போம்என தாணுவுக்கு வாக்களித்தார் கெளதம். சொன்னபடி கமல் படத்தை முடித்து விட்டு சிலந்தி படத்திற்கான கதைஆலோசனையில் இறங்கியுள்ளார் கெளதம். சிலந்தி படத்தின் நாயகனாக சரத்குமாரை புக் செய்து வைத்திருந்தார் கெளதம். அந்தரோலுக்கு சரத்தான் சரியாக இருப்பார் என்று கூறி அவரை பிடித்து வைத்திருந்தார்.சரத்குமாரும் இந்த வாய்ப்பை உடனடியாக ஏற்றுக் கொண்டார். காரணம் காக்க காக்க படம் சரத்தை வெகுவாக கவர்ந்து விட்டது. ஆனால் இப்போதுதிடீரென சிலந்தியிலிருந்து சரத்குமாரை நீக்கி விட்டாராம் கெளதம். இதற்கு என்னகாரணம் என்று தெரியவில்லை. கெளதக்கும், சரத்குக்கும் இடையே ஏதோ தகராறு என்று கோலிவுட்டில்கிசுகிசுக்கிறார்கள். இப்போது சரத்துக்குப் பதில் சூர்யா அல்லது விக்ரமை நடிக்கவைக்கலாமா என்று கெளதம் மேனன் யோசித்து வருகிறாராம்.

By Staff

சிலந்தி படத்திலிருந்து சரத்குமார் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் சூர்யாஅல்லது விக்ரம் நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தை கெளதம் மேனன் இயக்கிவருகிறார். இந்தப் படத்திற்கு முன்பாக அவர் ஒப்பந்தமான படம்தான் சிலந்தி.


கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தை இயக்கித் தருமாறு தாணுகேட்டுக் கொண்டார். அவரது தயாரிப்பில் ஏற்கனவே கெளதம் இயக்கிய காக்க காக்கசூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் கெளதம் மீது தாணுவுக்கு தனி மரியாதையே உண்டு.

எனவே தனது அடுத்த படத்தை இயக்கித் தருமாறு தாணு கேட்டபோது அதைகெளதமால் மறுக்க முடியவில்லை. வேட்டையாடி விட்டு சிலந்தியைப் பிடிப்போம்என தாணுவுக்கு வாக்களித்தார் கெளதம்.

சொன்னபடி கமல் படத்தை முடித்து விட்டு சிலந்தி படத்திற்கான கதைஆலோசனையில் இறங்கியுள்ளார் கெளதம்.


சிலந்தி படத்தின் நாயகனாக சரத்குமாரை புக் செய்து வைத்திருந்தார் கெளதம். அந்தரோலுக்கு சரத்தான் சரியாக இருப்பார் என்று கூறி அவரை பிடித்து வைத்திருந்தார்.சரத்குமாரும் இந்த வாய்ப்பை உடனடியாக ஏற்றுக் கொண்டார்.

காரணம் காக்க காக்க படம் சரத்தை வெகுவாக கவர்ந்து விட்டது. ஆனால் இப்போதுதிடீரென சிலந்தியிலிருந்து சரத்குமாரை நீக்கி விட்டாராம் கெளதம். இதற்கு என்னகாரணம் என்று தெரியவில்லை.


கெளதக்கும், சரத்குக்கும் இடையே ஏதோ தகராறு என்று கோலிவுட்டில்கிசுகிசுக்கிறார்கள். இப்போது சரத்துக்குப் பதில் சூர்யா அல்லது விக்ரமை நடிக்கவைக்கலாமா என்று கெளதம் மேனன் யோசித்து வருகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X