ஹீரோ .. ஹீரோ ..

By Staff

ரஜினிக்காக உருவாக்கப்பட்ட ஐயா படத்தில் சரத்குமார் நடிக்கவுள்ளார்.

தியானம் பண்ணிய நேரம் போக, திரையுலகில் லேட்டஸ்டாக ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர்களைக்கூப்பிட்டு கதை கேட்டு பொழுதைப் போக்குவதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினி. சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாய், ராமதாஸ் புண்ணியத்தில் அரசியல் வேலையும் வந்துவிட்டது ரஜினிக்கு.

கதை கேட்ட பின்பு, இதை 2 நாட்கள் ஊறப் போடுகிறேன் (மனசுக்குள்ள தான்) என்று சொல்லி அனுப்புவார்.அந்த இயக்குநரும் பத்திரிக்கையாளர்களிடம் ரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறேன். கூப்பிடறதாசொல்லியிருக்கிறார் என்று பேட்டி கொடுப்பார்.

ஆனால் அதன் பிறகு அடுத்த டைரக்டர் கதை சொல்லப் போகும்போது தான், தன்னுடை கதை நிராகரிக்கப்பட்டதுஅந்த இயக்குநருக்குத் தெரியும். இப்படி ரஜினியிடம் கதை சொன்னவர்களின் லிஸ்டில் ஷங்கர், சரண், தேஜா, ஹரிஎன்று சகலரும் அடக்கும். இன்னும் அந்த லிஸ்ட் நீண்டு கொண்டே இருக்கிறது.

இப்படியாக, ரஜினிக்காக ஹரி உருவாக்கிய கதை தான் ஐயா. இத்ல் ரஜினிகாந்த் நிச்சயம் நடிப்பார் என்றுசெய்திகள் பரவின. ஹரியும் அடிக்கடி இதை உறுதி செய்து வந்தார். கடைசியில் கதையை டிராப் செய்து விட்டார்ரஜினி. பிறிதொரு சந்தர்ப்பத்தில் சேர்ந்து செய்யலாம் என்று ஹரியிடம் கூறி விட்டதாகத் தெரிகிறது.

கதையோடு ஹரி உட்கார்ந்திருப்பதை அறிந்த சரத்குமார், அதில் நடிக்க விரும்பி ஹரியை அணுகினார்.

ஹரியும் ஓ.கே சொல்லவே, சாமியைத் தொடர்ந்து கவிதாலயா நிறுவனமே இப் படத்தை தயாரிக்கிறது.

விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளார்கள்.

ஏற்கனவே ரஜினிக்காக தெலுங்கு இயக்குநர் தேஜா தயார் செய்து வைத்திருந்த கதையை விஜயகாந்த் கேட்டுவாங்கிவிட்டது தான் உங்களுக்குத் தெரிந்திருக்குமே.

நிலைமை இப்படியிருக்க, எஸ்.ஜே. சூர்யா ரஜினியைச் சந்தித்து கதை சொன்னாராம். 20 வயசு, 40 வயது, 60 வயசுஎன மூன்று கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்று ரஜினியிடம் சொல்ல, நான் உங்களை 20 வருடத்துக்கு முன்சந்தித்திருக்கனும் என்று சொல்லி திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார் ரஜினி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X