»   »  சாணக்யாவிற்கு எதிராக பொங்கும் ஜ.மு.க. சரத்குமார் நடித்துள்ள சாணக்யா படத்தில் தங்களது கட்சிக் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து படம்வெளியிடப்பட்டுள்ள திரையரங்கங்கள் முன்பாக போராட்டம் நடத்தப் போவதாக வன்னியர்களின் கட்சியான ஜனநாயக முற்போக்குக்கழகம் அறிவித்துள்ளது.டாக்டர் ராமதாசுக்கு போட்டியாக முன்னாள் எம்.பி.ஜெகத்ரட்சகன் ஆரம்பித்த கட்சி ஜனநாயக முற்போக்குக் கழகம். வன்னியர்களிடம்ஓரளவுக்கு செல்வாக்குடன் திகழ்கிறது.இந் நிலையில் இக்கட்சியின் கொடி சரத்குமார் நடித்துள்ள சாணக்யா படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இக்கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சித் தலைவர் துரை, பொதுச் செயலாளர் பார்த்தீபன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில்,மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக எங்களது கட்சி போராடி வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் எங்களது கட்சிக்கு லட்சோபலட்சம் தொண்டர்கள் உள்ளனர்.எங்களது கட்சிக் கொடி, மேல் பகுதி மஞ்சள், நடுப்பகுதி சிவப்பு, கீழ் பகுதி மஞ்சள் நிறத்தைக் கொண்டது. இந்தக் கொடி தேர்தல்ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது. இந் நிலையில் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், திமுக எம்.பியுமான சரத்குமார் எங்களது கட்சிக் கொடியை தனது சாணக்யாபடத்தில் பயன்படுத்தியுள்ளார். இப்படத்தில் எங்களது கட்சிக் கொடியை தவறான தோற்றத்தில் காட்டியுள்ளனர்.எங்களது கட்சிக் கொடியை இடுப்பில் கட்டிக் கொண்டு ரவுடித்தனம் செய்வது போலவும், பெண்களிடம் முறைகேடாக நடப்பவர்கள்போலவும், சமூக விரோதிகள் போலவும் சித்தரித்துள்ளனர். கட்சி அலுவலகத்தில் புகுந்து எங்களது கட்சிக் கொடியை சரத்குமார் கிழித்துஎறிவது போலவும் சித்தரித்துள்ளனர். இது முற்றிலும் கண்டனத்துக்குரியது. சினிமா என்பது மக்களிடையே மிக வேகமாக ஊடுறுவும் ஊடகமாகும். இந் நிலையில் எங்களதுகட்சிக் கொடியை அவமரியாதை செய்த சரத்குமார், தயாரிப்பாளர் விஷ்வாஸ் சுந்தர், இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோருக்கு கடும்கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.படத்திலிருந்து உடனடியாக கட்சிக் கொடி வரும் காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் படம் வெளியாகியுள்ள அனைத்துத்திரையரங்குகள் முன்பும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

சாணக்யாவிற்கு எதிராக பொங்கும் ஜ.மு.க. சரத்குமார் நடித்துள்ள சாணக்யா படத்தில் தங்களது கட்சிக் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து படம்வெளியிடப்பட்டுள்ள திரையரங்கங்கள் முன்பாக போராட்டம் நடத்தப் போவதாக வன்னியர்களின் கட்சியான ஜனநாயக முற்போக்குக்கழகம் அறிவித்துள்ளது.டாக்டர் ராமதாசுக்கு போட்டியாக முன்னாள் எம்.பி.ஜெகத்ரட்சகன் ஆரம்பித்த கட்சி ஜனநாயக முற்போக்குக் கழகம். வன்னியர்களிடம்ஓரளவுக்கு செல்வாக்குடன் திகழ்கிறது.இந் நிலையில் இக்கட்சியின் கொடி சரத்குமார் நடித்துள்ள சாணக்யா படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இக்கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சித் தலைவர் துரை, பொதுச் செயலாளர் பார்த்தீபன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில்,மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக எங்களது கட்சி போராடி வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் எங்களது கட்சிக்கு லட்சோபலட்சம் தொண்டர்கள் உள்ளனர்.எங்களது கட்சிக் கொடி, மேல் பகுதி மஞ்சள், நடுப்பகுதி சிவப்பு, கீழ் பகுதி மஞ்சள் நிறத்தைக் கொண்டது. இந்தக் கொடி தேர்தல்ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது. இந் நிலையில் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், திமுக எம்.பியுமான சரத்குமார் எங்களது கட்சிக் கொடியை தனது சாணக்யாபடத்தில் பயன்படுத்தியுள்ளார். இப்படத்தில் எங்களது கட்சிக் கொடியை தவறான தோற்றத்தில் காட்டியுள்ளனர்.எங்களது கட்சிக் கொடியை இடுப்பில் கட்டிக் கொண்டு ரவுடித்தனம் செய்வது போலவும், பெண்களிடம் முறைகேடாக நடப்பவர்கள்போலவும், சமூக விரோதிகள் போலவும் சித்தரித்துள்ளனர். கட்சி அலுவலகத்தில் புகுந்து எங்களது கட்சிக் கொடியை சரத்குமார் கிழித்துஎறிவது போலவும் சித்தரித்துள்ளனர். இது முற்றிலும் கண்டனத்துக்குரியது. சினிமா என்பது மக்களிடையே மிக வேகமாக ஊடுறுவும் ஊடகமாகும். இந் நிலையில் எங்களதுகட்சிக் கொடியை அவமரியாதை செய்த சரத்குமார், தயாரிப்பாளர் விஷ்வாஸ் சுந்தர், இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோருக்கு கடும்கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.படத்திலிருந்து உடனடியாக கட்சிக் கொடி வரும் காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் படம் வெளியாகியுள்ள அனைத்துத்திரையரங்குகள் முன்பும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சரத்குமார் நடித்துள்ள சாணக்யா படத்தில் தங்களது கட்சிக் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து படம்வெளியிடப்பட்டுள்ள திரையரங்கங்கள் முன்பாக போராட்டம் நடத்தப் போவதாக வன்னியர்களின் கட்சியான ஜனநாயக முற்போக்குக்கழகம் அறிவித்துள்ளது.

டாக்டர் ராமதாசுக்கு போட்டியாக முன்னாள் எம்.பி.ஜெகத்ரட்சகன் ஆரம்பித்த கட்சி ஜனநாயக முற்போக்குக் கழகம். வன்னியர்களிடம்ஓரளவுக்கு செல்வாக்குடன் திகழ்கிறது.

இந் நிலையில் இக்கட்சியின் கொடி சரத்குமார் நடித்துள்ள சாணக்யா படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இக்கட்சி தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக கட்சித் தலைவர் துரை, பொதுச் செயலாளர் பார்த்தீபன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில்,

மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக எங்களது கட்சி போராடி வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் எங்களது கட்சிக்கு லட்சோபலட்சம் தொண்டர்கள் உள்ளனர்.

எங்களது கட்சிக் கொடி, மேல் பகுதி மஞ்சள், நடுப்பகுதி சிவப்பு, கீழ் பகுதி மஞ்சள் நிறத்தைக் கொண்டது. இந்தக் கொடி தேர்தல்ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது.


இந் நிலையில் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், திமுக எம்.பியுமான சரத்குமார் எங்களது கட்சிக் கொடியை தனது சாணக்யாபடத்தில் பயன்படுத்தியுள்ளார். இப்படத்தில் எங்களது கட்சிக் கொடியை தவறான தோற்றத்தில் காட்டியுள்ளனர்.

எங்களது கட்சிக் கொடியை இடுப்பில் கட்டிக் கொண்டு ரவுடித்தனம் செய்வது போலவும், பெண்களிடம் முறைகேடாக நடப்பவர்கள்போலவும், சமூக விரோதிகள் போலவும் சித்தரித்துள்ளனர். கட்சி அலுவலகத்தில் புகுந்து எங்களது கட்சிக் கொடியை சரத்குமார் கிழித்துஎறிவது போலவும் சித்தரித்துள்ளனர்.

இது முற்றிலும் கண்டனத்துக்குரியது. சினிமா என்பது மக்களிடையே மிக வேகமாக ஊடுறுவும் ஊடகமாகும். இந் நிலையில் எங்களதுகட்சிக் கொடியை அவமரியாதை செய்த சரத்குமார், தயாரிப்பாளர் விஷ்வாஸ் சுந்தர், இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோருக்கு கடும்கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

படத்திலிருந்து உடனடியாக கட்சிக் கொடி வரும் காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் படம் வெளியாகியுள்ள அனைத்துத்திரையரங்குகள் முன்பும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளனர்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil