»   »  நடிப்பில் செஞ்சுரி: சரத்துக்கு விழா

நடிப்பில் செஞ்சுரி: சரத்துக்கு விழா

Posted By:
Subscribe to Oneindia Tamil

100 படங்களில் நடித்துள்ளதற்காக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்குசென்னையில் இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது.

கண் சிமிட்டும் நேரம் படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சரத்குமார்.அப்படத்தில் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடித்தார். பின்னர் வில்லனாக நடிக்கஆரம்பித்தார். அதன் பின்னர் ஹீரோவாக உயர்ந்தார்.

தலைமகன் படம் சரத்தின் 100வது படமாகும். இப்படத்தின் இன்னொரு சிறப்புபடத்தை இயக்கியவரும் சரத்குமாரே. இந்த நிலையில் சரத்குமார் 100 படங்களில்நடித்ததைப் பாராட்டி விழா எடுக்கிறது நடிகர் சங்கம்.

இதுகுறித்து சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கூறுகையில், 100 படங்களில்நடித்தைதத் தொடர்ந்து சரத்குமாருக்குப் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை விழா நடைபெறுகிறது. இந்தநிகழ்ச்சியின்போது அரிமா சங்கம் சார்பில் சமூகப் பணிகளுக்குத் தேவையானநிதியை சேகரிக்க லஷ்மன்-ஸ்ருதி இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறதுஎன்றார் ராதாரவி.

திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்த பாராட்டு விழாவில் பங்கேற்கவுள்ளனராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil