ஜென் ஸி பசங்க பஞ்சாயத்து.. அவரே அந்த லிஸ்ட்ல இருக்காரு.. தீர்ப்பு சொல்லி சிக்கிய நாட்டாமை சரத்குமார்
சென்னை: கோலிவுட்டில் வில்லனாக அறிமுகமாகி பிறகு ஹீரோவாக நடித்து; இப்போது குணசித்திர வேடங்களில் கலக்கிவருகிறார் சரத்குமார். கடைசியாக அவர் நடித்திருந்த டியூட் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்தின் வெற்றிக்கு அவரது நடிப்பும் மிக முக்கிய காரணங்களில் ஒன்று. இந்நிலையில் சரத்குமார் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் சரத்குமார். அவர் முதலில் வில்லனாகத்தான் திரைத்துறையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். பிறகு படிப்படியாக வளர்ந்து ஹீரோவாக மாறிய அவர்; 90களில் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக மாறினார். அவரை சுப்ரீம் ஸ்டார் என்றும் ரசிகர்கள் கொண்டாடினார்கள். நாட்டாமை, சூர்யவம்சம், சூரியன் என பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்சனல் வாழ்க்கை: முதலில் சாயா தேவி என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி. சில காரணங்களால் சாயாவை பிரிந்த சரத்குமார்; பிறகு நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். சாயாவும், ராதிகாவும் நல்ல புரிதலோடு பழகிவருகிறார்கள் என்பதும் அவர்களது குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்று.

குணசித்திர நடிகர்: வில்லன், ஹீரோ என கலக்கிவந்த சரத்குமார் சமீப காலமாக குணசித்திர வேடங்களில் கலக்குகிறார். வாரிசு உள்ளிட்ட படங்களில் அந்த ரோலை ஏற்றிருந்த அவர்; கடந்த தீபாவளிக்கு வெளியாகியிருந்த டியூட் படத்தில் தான் ஏற்றிருந்த ரோலில் வில்லத்தனம் மற்றும் நகைச்சுவையையும் கலந்து நடித்திருந்தது பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டது.
இவரும் காரணம்: கிட்டத்தட்ட 110 கோடி ரூபாய்வரை படம் வசூலித்திருந்தது. இந்த மெகா ஹிட்டுக்கு சரத்குமாரின் நடிப்பும் காரணமும் ஒன்று. அவர் தோன்றிய ஒவ்வொரு சீனும் பட்டாசாக இருந்தது. ரசிகர்கள் கைத்தட்டி சிரித்து மகிழ்ந்தார்கள். இனி இதுபோன்ற கேரக்டர்கள் அவருக்கு வரிசையாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
என்ன வீடியோ?: அதாவது Spotify விளம்பரத்தில் நடித்திருக்கிறார் அவர். அந்த விளம்பரத்தில் நாட்டாமையாக வரும் அவர், இப்போது உள்ள ஜென் ஸி பசங்க பாட்டு கேட்டு கெட்டு போயிருக்கிறார்கள். இப்போது வரும் பாடல்களில் வரிகள் எல்லாம் புரியவில்லை. நாட்டுப்புற பாடல், வில்லு பாட்டு கேட்க வேண்டும் என்று சொல்ல; மற்றவர்கள் எல்லாம் உங்கள் மொபைலில் இருக்கும் பாடல் என்ன என கேட்க; அதில் டியூட் படத்தில் இடம்பெற்ற ஊரும் ப்ளட் பாடல் ஒலிக்கும்படி அந்த விளம்பர பட்ம் இருக்கிறது. இதனை ராதிகாவும் தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து க்யூட் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஊரும் ப்ளட் பாடல் இந்த ஆண்டில் 55 மில்லியனுக்கும் அதிகமான முறை ஸ்ட்ரீமாகியுள்ளது என்பதும் இந்த விளம்பரம் மூலம் தெரியவந்திருக்கிறது. இதன் காரணமாக இந்தப் பாடலை உருவாக்கிய இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மேற்கொண்டு ட்ரெண்டாகியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











