Ajith - என் படத்துக்கு உங்க கட்சிக்காரரால் பிரச்னை.. சரத்குமாருக்கு ஃபோன் போட்ட அஜித்.. வெளியான சீக்ரெட்
சென்னை: அஜித்குமார் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். ரசிகர் மன்றத்தை தனது 50ஆவது படமான மங்காத்தா படத்தின்போது கலைத்துவிட்டார். இருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கை கொஞ்சம்கூட குறையவில்லை. அவர் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் சீனியர் நடிகர் சரத்குமார் அஜித் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
கோலிவுட்டின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் அஜித்குமார். சினிமா பின்னணி இல்லாமல் சினிமாவுக்குள் வந்த அவர் இதுவரை 61 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் வெற்றியும், தோல்வியும் சரி பாதியாக இருப்பவை. இருப்பினும் தன்னம்பிக்கையை விடாத அவர் தொடர்ந்து நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவரது நடிப்புக்கு மட்டுமின்றி அவரின் விடாமுயற்சிக்கும் பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

விடாமுயற்சி: அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். படத்தின் பெயர் வைக்கப்பட்டதோடு சரி அதற்கு பிறகு படத்திலிருந்து வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. பொங்கல் பண்டிகையையொட்டி ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட்டை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் யானை பசிக்கு சோள பொறி போன்று விடாமுயற்சியின் ஓடிடி உரிமை குறித்த அப்டேட்டை மட்டும் வெளியிட்டுவிட்டு அமைதியாகிக்கொண்டது லைகா நிறுவனம்.
அஜர்பைஜான் ஓவர்: இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆக்ஷன் கதைகளை இயக்குவதில் மகிழ் திருமேனி கில்லாடி என்பதால் இதில் என்ன மாதிரியான ஆக்ஷனை காட்சிப்படுத்தியிருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். படத்தில் இன்னும் 40 சதவீதம் மட்டுமே ஷூட்டிங் இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் முடிந்துவிட்டது. அடுத்ததாக புதிய லொக்கேஷனில் நடக்கவிருக்கிறது.
அஜித் பாலிசி: அடுத்ததாக அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் அதற்கான பூஜை போடப்பட்டுவிட்டதாகவும் சமீபத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. இப்படி அஜித்தை பற்றியும் அவரது படங்கள் பற்றியும் எவ்வளவுதான் பரபரப்பாக, திடீர் திடீரென தகவல்கள் வெளியானாலும் அஜித்தின் பாலிசி என்பது எப்போதும் அமைதி காத்திருப்பதுதான். தனது குடும்பத்துடன் அதிகம் நேரம் செலவிடுபவரும் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரத்குமார் பேட்டி: இந்நிலையில் அஜித் குறித்து சீனியர் நடிகர் சரத்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசினார். அந்தப் பேட்டியில் அவர், "அஜித் ஒரு மிகச்சிறந்த மனிதர். அவருடைய ஆரம்ப காலங்களில் அவருக்கு ராதிகா மிகப்பெரிய உதவிகள் எல்லாம் செய்திருக்கிறார். அஜித்துக்கு மனதில் ஏதாவது நெருடல் ஏற்பட்டால் முதல் ஆளாக எனக்கு ஃபோன் செய்து, 'ஃப்ரீயா இருக்கீங்களா? வந்து பார்க்க வேண்டும்' என்று சொல்லிவிட்டு என்னை பார்த்து பேசிவிட்டு செல்வார். அப்படி இரண்டு முறை அவர் எனது வீட்டுக்கு வந்திருக்கிறார்.
உங்களுக்கு சம்பந்தம் இருக்கா?: அவருடைய மனதில் என்ன படுகிறதோ அதை மனதிலேயே பூட்டிக்கொள்ளாமல் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெளிவுப்படுத்திக்கொள்வார். அது பெரிய குணம். ஒரு முறை அஜித்தின் படத்துக்கு எதிராக ஒரு பிரச்னை கிளம்பியது. அதை தெரிந்துகொண்ட அஜித் எனக்கு ஃபோன் செய்து, 'படத்துக்கு எதிராக பிரச்னை செய்றவர் உங்க கட்சியை சேர்ந்தவர்னு சொல்கிறார்கள். நீங்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கீங்க என்றும் சொல்கிறார்கள். அது எல்லாம் உண்மையா? என்று கேட்டார். அதற்கு நான், இல்லை அஜித் அவர் எனது கட்சியில் இருந்து எப்போதோ வெளியேறிவிட்டார். இந்தப் பிரச்னைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று விளக்கமளித்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











