ஹீரோ .. ஹீரோ ..

By Staff

பவித்ரன் இயக்கத்தில் சரத்குமார் புகழ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சரத்குமாரை வைத்து சூரியன் படத்தை எடுத்தவர் பவித்ரன்.

இதையடுத்து இந்து, திருமூர்த்தி முதலான படங்களைஇயக்கினார்.

திடீரென்று சினிமாவிலிருந்து காணாமல் போனவர் மீண்டும் வந்துள்ளார்.

இப்போது எஸ்.வி.ஜி.கிரியேஷன் சார்பில் கே.ராமு தயாரிக்கும் புகழ் என்ற படத்தை இயக்குகிறார்.

இதில் கதாநாயகனாக சரத்குமாரும், அவருக்கு ஜோடியாக சங்கவியும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் இன்னொரு ஜோடியாக ஜெய் - ஷெரீன் நடிக்கின்றனர்.

படத்தில் சரத்குமாருக்கு இரட்டை வேடம்.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக ஒரு வேடத்திலும், கல்லூரிமாணவராக ஒரு வேடத்திலும் நடிக்கிறார்.

படத்தை இயக்கும் பவித்ரன் கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்புகளையும் தானே ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஒளிப்பதிவை அசோக்குமாரும், வி.டி.விஜயன் எடிட்டிங்கையும் செய்கிறார்கள்.

தேவாவின் மெட்டுகளுக்கு வாலி பாடல்கள் எழுதுகிறார்.

படத்தின் படப்பிடிப்பு கேரளா, சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

சரத்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டன.

இதற்காக அவர் 52 நாட்கள் கால்ஷீட்கொடுத்துள்ளார்.

படத்தின் ஹைலைட்டாக, பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்ட ஒரு கார் சேஸிங் காட்சியையும், ஜெய் -ஷெரீன் நடித்த ஒரு பாடலை நீருக்கடியில் வித்தியாசமான முறையில் படமெடுத்ததையும் சொல்கிறார் இயக்குநர்பவித்ரன்.

படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X