twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாசிசம் தோற்கடிக்கப்படும்: 'சர்கார்'-ஐ கண்டித்த தமிழக அரசுக்கு கமல் நறுக்

    By Siva
    |

    Recommended Video

    ஏ.ஆர். முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழக அரசு- வீடியோ

    சென்னை: சர்கார் விஷயத்தில் ஏ.ஆர். முருகதாஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் கமல் ஹாஸன்.

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் இலவச மிக்சி, கிரைண்டரை தீயில் போடும் காட்சிக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    அதன் வலியுறுத்தலின்பேரில் மறுதணிக்கை செய்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது.

    தமிழக அரசு

    தமிழக அரசு

    அரசின் நலத்திட்ட உதவிகளை விமர்சித்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அரசையோ அரசின் நலத்திட்டங்களையோ விமர்சிக்க மாட்டேன் என உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதை பார்த்த கமல் ஹாஸன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

    கமல் ஹாஸன்

    சென்சார் போர்டு பார்த்து சர்காருக்கு சான்றிதழ் அளித்தது. அப்படி இருந்தும் மக்களின் கருத்துரிமையில் தலையிடுகிறது அரசு. இது ஜனநாயகம் அல்ல. பாசிசம் முன்பு தோற்கடிக்கப்பட்டது, மீண்டும் நடக்கும் என்று கமல் ஹாஸன் ட்வீட் செய்துள்ளார்.

    நீதிமன்றம்

    சர்கார் விஷயத்தில் இன்னும் பிரச்சனை தீரவில்லை.

    ஆதரவு

    கருத்து சுதந்திரத்தில் அரசு தலையிடுவதை கண்டித்துள்ள கமல் ஹாஸனை பலரும் பாராட்டியுள்ளனர்.

    English summary
    Kamal Haasan tweeted that, 'Sarkar has been certified by CBFC. Yet Government dares to muffle the right of people to express. This is not democracy. Fascism was defeated before, will be done again. ARMurugadoss'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X