சர்கார் படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை: விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி
Recommended Video

சென்னை: சர்கார் படத்திற்கு வரும் பிரச்சனைகளை பார்த்து விஜய் ரசிகர்கள் நொந்து போகவில்லை.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. சர்கார் கதை திருட்டு குறித்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி விஷாலிடம் குறும்பட இயக்குனர் ஒருவர் மனு அளித்துள்ளார்.
பிரச்சனை
சர்கார் பட பிரச்சனைகளை பார்த்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியா என்று டென்ஷன் ஆக வேண்டாம். பிரச்சனை மூலம் இலவச விளம்பரம் கிடைக்கும் மகிழ்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள்.
ரசிகர்கள்
சர்கார் படத்திற்கு வரும் பிரச்சனைகளை பார்த்து விஜய் ரசிகர்கள் இடிந்து போகவில்லை. மாறாக அதை படத்திற்கான விளம்பரமாக பார்க்கிறார்கள்.
சன் பிக்சர்ஸ்
பிரச்சனைகளை கூட விஜய் ரசிகர்கள் பாசிட்டிவாக எடுத்துக் கொள்கிறார்கள்.
இலவச விளம்பரம்
மெர்சல் படம் போன்று சர்காருக்கும் இலவச விளம்பரம் நிறையவே கிடைக்கிறது
தளபதி
பல பிரச்சனைகளுக்கு பிறகு தியேட்டருக்கு சென்று தளபதி விஜய் என்ற டைட்டில் கார்டை பார்க்கும்போது ஒரு ஃபீல் வருமே அது தனி ஃபீல் என்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











