செய்வீங்களா, எனக்காக செய்வீங்களா?: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள் #Sarkar

By Siva

Recommended Video

தன்னுடைய ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்- வீடியோ

சென்னை: சர்கார் படம் ரிலீஸாக உள்ள நிலையில் விஜய் தனது ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளி ஸ்பெஷலாக வரும் 6ம் தேதி ரிலீஸாக உள்ளது.

கதை சர்ச்சை சுமூகமாக தீர்ந்ததில் விஜய் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 பாலாபிஷேகம்

பாலாபிஷேகம்

விஜய் படம் ரிலீஸாகும் போது எல்லாம் அவரின் ரசிகர்கள் மெகா கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சர்காருக்கும் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்ய ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் விஜய் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 விஜய்

விஜய்

என் கட்அவுட்டுக்கு ரசிகர்கள் யாரும் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம். கட்அவுட்டுகளில் பாலை ஊற்றுவதற்கு பதில் அதை ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். அதனால் என் ரசிகர்கள் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

 ரசிகர்கள்

ரசிகர்கள்

கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது பாசத்தால் தான் என்பதால் விஜய்யின் வேண்டுகோள் ரசிகர்களை தர்மசங்கடத்தில் விட்டுள்ளது. முன்னதாக காவலன், வேட்டைக்காரன் ஆகிய படங்கள் ரிலீஸானபோதும் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்று விஜய் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மெகா கட்அவுட்

மெகா கட்அவுட்

சர்கார் ரிலீஸை முன்னிட்டு கேரளாவில் விஜய்க்கு 175 அடி கட்அவுட் வைத்துள்ளார்கள் ரசிகர்கள். தமிழகத்தை போன்றே கேரளாவிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சர்கார் கேரளாவில் நிச்சயம் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X