ட்விட்டரில் சாதனை படைத்த சர்கார்: காரணம் தளபதி ரசிகர்கள் #SarkarRulesTwitterIndia
Recommended Video

சென்னை: 2018ம் ஆண்டு இந்தியாவில் ட்விட்டர் ஹேஷ்டேக்குகளில் சர்கார் முதலிடத்தை பிடித்துள்ளது.
2018ம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் டாப் 10 ஹேஷ்டேக்குகளை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. அதில் தென்னிந்திய படங்களே அதிக இடத்தை பிடித்துள்ளன.
அதிலும் குறிப்பாக விஜய்யின் சர்கார் தான் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஹேஷ்டேகுகள்
2018ம் ஆண்டில் ட்விட்டர் இந்தியாவின் டாப் 10 ஹேஷ்டேகுகள் பட்டியலில் சர்கார் முதலிடத்திலும், விஸ்வாசம் இரண்டாம் இடத்திலும், பரத் அனேநேனு 3வது இடத்திலும், அரவிந்த சமேதா 4வது இடத்திலும், ரங்கஸ்தலம் 5வது இடத்திலும், காலா 6வது இடத்திலும், பிக் பாஸ் தெலுங்கு 2 7வது இடத்திலும், மீ டூ 8வது இடத்திலும், விசில் போடு 9வது இடத்திலும், ஐபிஎல் 2018 10வது இடத்திலும் உள்ளது.
சர்கார்
சர்கார் டாப் 10 ஹேஷ்டேகுகள் பட்டியலில் மட்டும் அல்ல 2018ம் ஆண்டில் இந்தியாவில் ட்விட்டரில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களை துள்ளிக் குதிக்க வைத்துள்ளது.

பாலியல் புகார்
2018ம் ஆண்டு ட்விட்டர் இந்தியாவில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய 10 நிகழ்வுகள் பட்டியலில் மீ டூ 2வது இடத்தில் உள்ளது. நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் சிங் ஆகியோரின் பெயரை சேர்த்து உருவாக்கப்பட்ட #DeepVeer ஹேஷ்டேகும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

ட்வீட்
சர்கார் படம் குறித்து விஜய் ரசிகர்கள் #Sarkar என்ற ஹேஷ்டேகுடன் ட்விட்டரில் அதிக அளவில் பேசியதால் இந்த சாதனை நடந்துள்ளது. இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள் தளபதி ரசிகர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்
2018ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட இந்தியர்களின் ட்விட்டர் கணக்குகள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்திலும், ராகுல் காந்தி 2வது இடத்திலும் உள்ளனர். அந்த பட்டியலில் நடிகர்கள் பவன் கல்யாண், ஷாருக்கான், விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகியோரின் பெயர்களும் உள்ளது.


Click it and Unblock the Notifications











