இருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு
சென்னை: இந்த விநாயகர் சதுர்த்தியில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு விருந்து உள்ளது.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ஒரு பாடல் வீடியோ ஆன்லைனில் கசிந்து படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட முருகதாஸ் ட்ரெய்லரை இன்னும் வெளியிடவில்லை.

விஸ்வாசம்
சர்கார் பட ட்ரெய்லரை வரும் செப்டம்பர் மாதம் 13ம் தேதி அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட முருகதாஸ் திட்டமிட்டுள்ளாராம். இதே நாளில் தான் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட உள்ளது. விஸ்வாசம் படத்தில் நட்சத்திர பட்டாளமே உள்ளது என்பதை தவிர வேறு எந்த விபரமும் இதுவரை வெளியாகவில்லை.

வினோத்
விஸ்வாசம் படம் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் தற்போது பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். 4 படங்களுக்கு பிறகு இயக்குனர் சிவா கூட்டணியில் இருந்து வெளியேறுகிறார் அஜித். வினோத், அஜித் இணையும் படம் இந்தி படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

கதை
அமெரிக்காவில் வசிக்கும் விஜய் ஓட்டு போட சொந்த ஊருக்கு வருகிறார். ஆனால் அவர் பெயரில் ஏற்கனவே யாரோ கள்ள ஓட்டு போட்டது தெரிந்து கோபம் அடைகிறார். இதையடுத்து தமிழகத்தில் தங்கி அரசியல்வாதிகளுக்கு எதிராக களத்தில் குதிக்கிறாராம். இது தான் சர்கார் படத்தின் கதை என்று தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி
சர்கார் படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. படத்தை புதுமையாக எடுக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் அட்லி. பொறுப்பு அதிகமாகியுள்ளதால் மீண்டும் விஜய்யை வைத்து படம் எடுக்க பயமாக உள்ளது என்று அட்லி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











