காதலுனா ஓகே… கல்யாணம் எனக்கு செட்டாகாது….3 நடிகைகளை கழட்டி விட்ட பிரபல நடிகர் !
சென்னை : ஆர்யா, வெளிநாட்டுப் பெண் ஒருவரை ஏமாற்றி பணம் பறித்த விஷயம் வைரலாகி ஒரு பக்கம் புயலை கிளப்பி வருகிறது.
இந்த நேரத்தில் ஆர்யாவின் பழைய கிசுகிசுக்கள் ஒவ்வொன்றாக வெளியே வரத் தொடங்கி உள்ளன.
ஆர்யா குறித்து வேகமாக பரவி வரும் இந்த தகவலால் ஆர்யாவின் ரசிகைகள் கவலை அடைந்துள்ளனர்.

அறிமுகம்
அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் அறிமுகமானார் ஆர்யா. இந்த திரைப்படத்தில், பிரகாஷ் ராஜ், நவ்தீப் மற்றும் சமிக்சா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு முன்பே உள்ளம் கேட்குமே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றுதந்தது.

காதல் மன்னன்
இதைத் தொடர்ந்து கலாபக் காதலன், ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட 25க்கும் மேல்பட்ட திரைப்படங்களில் நடித்தார். கலாபக் காதலன் திரைப்படத்தில் நடித்த பிறகே இவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் இவரை பார்த்து பார்த்து உருகினார்கள். சாயிஷாவை திருமணம் செய்து கொண்டாலும் தற்போது வரை பெண்கள் விரும்பும் நாயகனாகவே இவர் இருந்து வருகிறார்.

ஜெர்மனி பெண் வழக்கு
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இலங்கை தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூபாய் 71 லட்சம் பணம் பறித்துக் கொண்டு, பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என விட்ஜா என்ற பெண் சிபிசிஐடி-யிடம் ஆன்லைன் மூலம், புகார் கொடுத்தார். இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரப்பை ஏற்படுத்திவரும் நேரத்தில், நடிகர் ஆர்யா சாயிஷாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு 3 நடிகைகளை காதலித்ததாகவும் பின் அவர்களுடனான உறவை துண்டித்துக் கொண்டதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

காதல் முறிந்தது
எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே திரைப்படத்தின் அறிமுகமானவர் நிலா. இவர் ஜாம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆர்யாவும் நிலாவும் நீண்ட ஆண்டுகளாக காதலித்ததாகவும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டபோது கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ப்ரேக் அப்
இதையடுத்து ஓரம்போ, நான் கடவுள் திரைப்படத்தில் நடித்த பூஜாவை காதலித்துள்ளார் ஆர்யா. இருவரும் பல இடங்களில் சுற்றித்திருந்த நிலையில் திடீரென பூஜா உடனாக காதலை ஆர்யா ப்ரேக்அப் பண்ணிவிட்டாம்.

குட்பை சொன்ன ஆர்யா
இதையடுத்து ஓரம்போ, நான் கடவுள் திரைப்படத்தில் நடித்த பூஜாவை காதலித்துள்ளார் ஆர்யா. இருவரும் பல இடங்களில் சுற்றித்திரிந்த நிலையில் திடீரென பூஜா உடனான காதலை ஆர்யா ப்ரேக்அப் பண்ணிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











