twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அட.. அதுக்குள்ள சரத்குமாருக்கு 60 வயது ஆயிருச்சா...!

    By Sudha
    |

    சென்னை: நடிகரும், நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு 60 வயதாகப் போகிறது. இதையொட்டி அவர் தனது மனைவி சகிதம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஹோமம் வளர்த்து சாமி கும்பிட்டார்.

    சரத்குமாருக்கு 60 வயது என்பதே முதலில் ஆச்சரியமான செய்திதான். யாருமே அவருக்கு 60 வயதாகிறது என்றால் நிச்சயம் நம்ப மாட்டார்கள். ஆனால் மணி விழா காண்கிறார் சரத்குமார்.

    சரத்குமார், ராதிகாவுடன், ராதிகாவின் தங்கை நடிகை நிரோஷாவும் கோவிலுக்கு வந்திருந்தார்.

    டெல்லியில் பிறந்த ராமநாதபுரத்து சரத்

    டெல்லியில் பிறந்த ராமநாதபுரத்து சரத்

    சரத்குமாரின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டமாகும். ஆனால் சரத் பிறந்ததோ டெல்லியில். ராமநாதன், புஷ்பலீலா தம்பதியினரின் மகனாக 1954ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி பிறந்தவர் சரத்குமார்.

    சகலகலா திறமையாளர்

    சகலகலா திறமையாளர்

    விளையாட்டு, என்சிசி, உடற்பயிற்சி, பத்திரிகைத்துறை, திரைப்படம் என பல துறைகளிலும் ஆர்வம் கொண்டவர், பரிமளித்தவர் சரத்குமார்.

    மிஸ்டர் மெட்ராஸ்

    மிஸ்டர் மெட்ராஸ்

    இவரது உடற்கட்டு, 1974ம் ஆண்டு சென்னையில் நடந்த மிஸ்டர் மெட்ராஸ் போட்டியில் இவருக்குப் பட்டம் வாங்கிக் கொடுத்தது. அதன் பிறகு பெங்களூருக்கு இடம் பெயர்ந்த சரத்குமார், அப்போது அவரது அக்காள் கணவரான கே.பி.கந்தசாமிக்குச் சொந்தமான தினகரன் நாளிதழில் வேலை பார்த்தார்.

    டிராவல்ஸ் கம்பெனி ஓனர்

    டிராவல்ஸ் கம்பெனி ஓனர்

    பின்னர் சென்னைக்குத் திரும்பிய அவர் தனியாக டிராவல்ஸ் கம்பெனி ஒன்றைத் தொடங்கி நடத்தினார்.

    சினிமாவில் அறிமுகம்

    சினிமாவில் அறிமுகம்

    டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தியபடியே சினிமா தயாரிப்பில் இறங்கினார் சரத்குமார். கார்த்திக், அம்பிகா இணைந்து நடித்த கண் சிமிட்டும் நேரம் படத்தைத் தயாரித்தார். அதில் வில்லன் வேடத்திலும் நடித்தார். இதையடுத்து அவரைத் தேடி வில்லன் வேடங்கள் வரத் தொடங்கின. ஆனால் அதற்கு முன்பாகவே 1986ம் ஆண்டு தெலுங்குப் படம் ஒன்றில் முதல் முதலாக அவர் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

    130 படங்களுக்கு மேல்

    130 படங்களுக்கு மேல்

    இதுவரை 130 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் நடித்துள்ளார் சரத்குமார்.

    பன்மொழிப் புலவர்

    பன்மொழிப் புலவர்

    தாய் மொழி தமிழ் தவிர கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சரளமாகப் பேசக் கூடியவர் சரத்குமார்.

    2007 முதல் தனி அரசியல் வழியில்

    2007 முதல் தனி அரசியல் வழியில்

    திமுக, அதிமுக என இரு பெரும் கட்சிகளிலும் இருந்தவர் சரத்குமார். பின்னர் 2007ம் ஆண்டு இவரே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் தனிக் கட்சி கண்டார். இப்போது எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார்.

    மணிவிழா ஆண்டில்

    மணிவிழா ஆண்டில்

    இந்த ஆண்டு சரத்குமாருக்கு மணி விழா ஆண்டு. இதையொட்டி சரத்குமார், தனது மனைவி ராதிகாவுடன் மயிலாடுதுறையை அடுத்த திருக்கடையூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தார். அங்கு அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோயிலில் சரத்குமார் - ராதிகா தம்பதியினர் ஹோமம் வளர்த்து சாமி கும்பிட்டனர். அவர்களுடன் நடிகர் ராதாரவி, நிரோஷா ஆகியோரும் வந்திருந்தனர்.

    English summary
    Sarth Kumar will turn 60 years in coming July. He visited Thirukadayur temple with this wife Radhika and others on Tuesday on this regard.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X