பழைய பாட்டுத்தான் இருந்தாலும் தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்..: தீர்ப்பு குறித்து கமல்
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து கமல் ஹாஸன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியுள்ளது. சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் 4 ஆண்டு கால சிறை தண்டனையும், ரூ. 10 கோடி அபரதாமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முதல்வராக வேண்டும் என்ற சசிகலாவின் கனவு தவிடிபொடியாகியுள்ளது. சசிகலா உள்ளிட்டோர் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கமல் ஹாஸன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பழைய பாட்டுத்தான் இருந்தாலும்...
தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்..
எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்.. என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











