நரைத்த தாடியில் சசிகுமார் அசத்தலான லுக்... தெறிக்குது சோசியல் மீடியா!
சென்னை : சென்ற ஆண்டு ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற க. பெ. ரணசிங்கம் திரைப்படத்தின் இயக்குனர் விருமாண்டி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் கதாநாயகனாக சசிகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நாடோடிகள் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து நாடோடிகள் 2 வெளியாகி ரசிகர்களை கவராமல் தோல்வியை சந்தித்தது.
தனக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கும் சசிகுமார் இப்பொழுது நரைத்த தாடியில் ராவான லுக்கில் மாஸாக போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களை தெறிக்க விட்டு வைரலாகி வருகிறது.

வெகுளித்தனமான சிரிப்புடன்
யதார்த்தமான நடிப்பு வெகுளித்தனமான சிரிப்புடன் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சசிகுமார் சிவகார்த்திகேயனின் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் பக்கா ஆக்ஷன் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.

அதிக கவனம்
ஆரம்பத்தில் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான சசிகுமார் இயக்கிய முதல் திரைப்படத்திலேயே நடிப்புக்கும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கிவிட்டார். தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இப்பொழுது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி அடுத்தடுத்த திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறது.

அதிகாரப்பூர்வ தகவல்
விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் வெற்றிக் கூட்டணியில் உருவான க. பெ. ரணசிங்கம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தது. மேலும் அந்த திரைப்படத்தின் இயக்குனர் விருமாண்டிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வர இயக்குனர் விருமாண்டியின் அடுத்த திரைப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள அதிகாரப்பூர்வ தகவல் ஓரிரு நாட்களுக்கு முன்பு வெளியானது. எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா, மற்றும் பகைவனுக்கு அருள்வாய் என கை நிறைய திரைப்படங்கள் உடன் செம பிஸியாக நடித்து வரும் சசிகுமார் இப்பொழுது போட்டோஷூட்டிலும் கலக்கி வருகிறார்.

வெறித்தனமான போட்டோஷூட்
ஹீரோயின்களை போல ஹீரோக்கள் அவ்வளவாக போட்டோஷூட்டில் ஈடுபடுவதில்லை என்றாலும் அவ்வப்போது எடுக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாவது வழக்கமான ஒன்றுதான். இந்த வகையில் சசிகுமாரின் வித்தியாசமான புது கெட்டப்பில் நரைத்த தாடியுடன் முரட்டு லுக்கில் செம ஸ்டைலிஷாக ப்ரவுன் கலர் ஓவர் ஜாக்கெட் மற்றும் டீ சர்ட் ஸ்டைலிஷான பேண்ட் ஷூ என ஆளே டோட்டலாக மாறிப்போன சசிகுமாரின் வெறித்தனமான இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இப்பொழுது சோசியல் மீடியாவை தெறிக்க விட்டு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











