கோட் சூட்டில் கலக்கும் சசிகுமார்… ஹாலிவுட் ஹீரோ போல ஜம்முனு இருக்காரே!

சென்னை :விஜய் சேதுபதி,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் இயக்குனர் விருமாண்டி அடுத்து இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக சசிகுமாரும் ஒப்பந்தமாகியுள்ளார்.

சுப்ரமணியபுரம், ஈசன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனராக படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹீரோவாக சும்மா ஜம்முன்னு தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையாக கைநிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பெரும்பாலும் வில்லேஜ் கதாபாத்திரங்களில் கிராமத்து பையனாகவே வந்து நடித்த சசிகுமார் எனை நோக்கி பாயும் தோட்டாவில் செம ஸ்டைலிஸில் நடித்திருக்க இனி எல்லாமே மாறப்போகுது என செம ஸ்டைலிஷாக போட்டோ ஷூட் நடத்தி அனைவரையும் மிரள வைத்து வருகிறார்.

தனித்துவமான திரைப்படமாக

தனித்துவமான திரைப்படமாக

எதார்த்தமான நடிகராக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த இயக்குனராகவும் இருந்து வரும் எம். சசிகுமார் சினிமாவிற்கு முதன்முறையாக சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். சுப்பிரமணியபுரம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்து சசிகுமார் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று தனித்துவமான திரைப்படமாக கொண்டாடப்பட்டது. இதில் இரண்டாம் கதாநாயகனாகவும் நடித்திருப்பார்.

போரடித்து போன ரசிகர்கள்

போரடித்து போன ரசிகர்கள்

பெரும்பாலான திரைப்படங்களில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நட்பை போற்றும் வசனங்கள் வைத்து ஹிட் படங்களை கொடுத்து வரும் சசிகுமார் நாடோடிகள் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமும் வெளியாக, இந்தமுறை போரடித்து போன ரசிகர்கள் கலவையான விமர்சனங்களுடன் இந்த திரைப்படத்தையும் சுமாரான வெற்றிப்படமாக ஆகியுள்ளனர்.

பட்டையைக் கிளப்பி

பட்டையைக் கிளப்பி

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா என தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் பணியாற்றிவந்த இயக்குனர் பொன்ராம் முதன்முறையாக சசிகுமாருடன் இணைந்து எம்ஜிஆர் மகன் என்ற திரைப்படத்தில் பணியாற்ற இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளிவர தயாராகி உள்ளது. பாடல்கள் அனைத்தும் வெளியாகி பட்டையைக் கிளப்பி உள்ளது. மேலும் பொன்ராம் விஜய் சேதுபதி வைத்து ஒரு படமும் இயக்குகிறார்.

நுனிநாக்கு இங்கிலீஷ் பேசி

நுனிநாக்கு இங்கிலீஷ் பேசி

ஒரே மாதிரி லுக்கில் படங்களில் நடித்து வந்த சசிகுமார் என்னை நோக்கி பாயும் தோட்டாவில் கொஞ்சம் ஸ்டைலிஷாக முக்கியமான வேடத்தில் நுனிநாக்கு இங்கிலீஷ் பேசி நடித்திருக்க ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அதே பாணியில் ஸ்டைலான சில போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு மாஸ்

ஹாலிவுட் ரேஞ்சுக்கு மாஸ்

ஏற்கனவே இவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலான நிலையில் இப்பொழுது கோட்டு சூட்டுடன் கையில் குடை மற்றும் கூலிங்கிளாஸ் என பார்க்கவே மிகவும் வித்தியாசமாக உள்ளார். ஒரு ஷாட்டில் பேப்பர் படித்துக் கொண்டும் மற்றொரு ஷாட்டில் டீ குடித்துக் கொண்டும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு மாஸ் ஹீரோ போல போஸ் கொடுத்திருக்கும் சசிகுமாரின் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தை திணறடித்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X