போராளியைத் தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் 'குட்டிப்புலி'!
போராளி படத்தில் மாறுபட்ட நடிப்பில் அசத்திய இயக்குநர் சசிகுமார், அடுத்து நடிக்கும் படம் குட்டிப்புலி.
தேசிய விருது பெற்ற 'வாகை சூடவா' படத்தை தயாரித்த வில்லேஜ் தியேட்டர்ஸ் எஸ் முருகானந்தம் இந்த குட்டிப்புலியைத் தயாரிக்கிறார்.
பூபதிபாண்டியனிடம் உதவி இயக்குநராக இருந்த முத்தையா இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மகேஷ்முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, வாகை சூடவா மூலம் அறிமுகமான ஜிப்ரான் இசையமைக்கிறார். அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூரை களமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் திரைக்கதை, பெண்மையின், தியாகத்தையும் வீரத்தையும் பிரதானப்படுத்துவதாக அமைக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
Comments


Click it and Unblock the Notifications
