’பொண்டாட்டிதான் லைப்பே...’: ’குட்டிப்புலி’யில் சசி
சென்னை: 'குட்டிப்புலி' என்ற பெயரில் ராஜபாளையத்தில் வாழ்ந்த ஒருவரின் உண்மைக்கதையை மையமாகக் கொண்டு சசி குமார் நடிப்பில் தயாராகி வரும் படம் 'குட்டிப்புலி'.
இப்படத்திற்காக உண்மையிலேயே சிலம்பாட்டம் கற்றுக் கொண்ட சசிகுமார், படத்தில் ' பொண்டாட்டி தான் வாழ்க்கையே' என தத்துவத்தைப் பொழிந்துள்ளாராம்.
'குட்டிப்புலி' விரைவில் வெள்ளித்திரையில் பாய தயாராக இருக்கிறது.

ஆடும் குட்டிப்புலி...
குட்டிப்புலிக்காக நடனமும் கற்றுக் கொண்டுள்ளாராம் சசி. படத்தில் வரும் ஒரு ரீ-மிக்ஸ் பாடலில் தன் கலக்கல் 'நடனத் திறமையை' நிரூபித்துள்ளாராம்.

புகழ் மழையில் சசி...
மத்த ஹீரோக்கள் நடிக்கத் தயங்கும் க்ளைமேக்ஸ் காட்சியில் தயக்கமின்றி நடித்துள்ளாராம் சசி. இதனால் அவரைப் புகழ்ந்து தள்ளுகின்றனர் படத் தயாரிப்புக் குழுவினர்.

’பேண்ட்’ காமெடி...
படம் முழுவதும் வேட்டியில் கலக்கும் சசி, ஒரே ஒரு காட்சியில் மட்டும் பேண்ட் போட்டு வருகிறாம். அது ஒரு நகைச்சுவை காட்சியாக ரசிகர்களை வயிறு குலுங்க வைப்பது உறுதியாம்.

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்...
மனைவியின் மகத்துவத்தைப் போற்றும் விதமாக படம் சித்தரிக்கப் பட்டுள்ளதாம். படத்தில் 'பொண்டாட்டி தான் எல்லாம்' என வசனம் பேசுகிறாராம் சசி.


Click it and Unblock the Notifications











