சிரிக்க வைக்காத சதீஷ்.. நீங்க காட்டுன வித்தைக்கு இதுவே ஜாஸ்தி.. வித்தைக்காரன் வசூல் இவ்ளோதானா?

சென்னை: இனிமேல் இப்படித்தான் என சந்தானம் ஒரு பக்கம் ஹீரோவாக நடித்து தயாரிப்பாளர்களை தலையில் துண்டு போட வைத்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் சதீஷும் சினிமாவில் நடிச்சா இனிமேல் ஹீரோ தான் அலப்பறையை கிளப்பி வருகிறார். ஆனால், படம் ஓடுதா? வசூல் ஈட்டுதா? என்று பார்த்தால் அதுதான் இல்லவே இல்லை என்கிறது பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்.

வெங்கி இயக்கத்தில் சதீஷ் நடித்து இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான வித்தைக்காரன் படத்தில் எந்தவொரு வித்தையும் எடுபடவில்லை என ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். இந்நிலையில், இதுவரை 2 நாட்கள் அந்த படம் செய்துள்ள பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி இங்கே பார்க்கலாம் வாங்க..

Sathishs Vithaikkaaran Day 2 Box Office collection reports are here

வித்தைக்காரன் கதை: ஒரு பக்கம் மேஜிக் மேனாகவும், இன்னொரு பக்கம் விமானத்தில் துப்புரவு தொழிலாளியாகவும் வேலை பார்த்து வரும் சதீஷ் 3 வில்லன்களை எப்படி சாதுர்யமாக சமாளித்து அனைவரையும் ஏமாற்றி ஜெயிக்கிறார் என்பது தான் வித்தைக்காரன் படத்தின் கதையாக உள்ளது. ஆனால், திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் ஏற்பட்ட சொதப்பல் காரணமாக படம் பெரிதாக ஓடவில்லை.

வித்தைக்காரன் பட்ஜெட்: வெங்கி இயக்கத்தில் சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்த்ராஜ், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள வித்தைக்காரன் படம் ஒட்டுமொத்தமாக 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், படத்தின் பட்ஜெட்டுக்கு கொஞ்சம் கூட லாபத்தை தரும் அளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் படம் ஓடாமல் பஞ்சராகி கிடக்கிறது.

2 நாள் வசூல் நிலவரம்: முதல் நாளில் 27 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்த சதீஷின் வித்தைக்காரன் 2வது நாளில் 25 லட்சம் ரூபாய் வசூல் செய்து ஒட்டுமொத்தமாக 52 லட்சம் ரூபாய் வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று 30 லட்சம் வரை வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக கூட்டினால் கூட 1 கோடி ரூபாய் வசூலை வித்தைக்காரன் ஈட்டுமா? என்பது சந்தேகம் தான் என்கின்றனர். சிறிய பட்ஜெட்டில் படம் எடுப்பது தவறில்லை. ஆனால், ரசிகர்கள் ரசிக்கும்படியான படத்தையோ அல்லது தயாரிப்பாளர் செலவு செய்த பட்ஜெட்டையாவது திருப்பி எடுக்கும் அளவுக்கான படத்தை உருவாக்க வேண்டும் என சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X