»   »  முடி துறந்த சத்யராஜ்!

முடி துறந்த சத்யராஜ்!

Subscribe to Oneindia Tamil
பெரியார் படத்தில் நடித்து வரும் நடிகர் சத்யராஜ், தனது தலையை தினசரி மொட்டைஅடித்து வருகிறாராம். அத்தோடு, தனது உடலில் மண்டிக் கிடந்த முடியையும் ஷேவிங்செய்து நீக்கி விட்டாராம். அதையும் தினசரி ஷேவ் செய்து வருகிறாராம்.
ஐஏஎஸ் அதிகாரி ஞானராஜசேகரன் இயக்கத்தில் சத்யராஜ் பெரியார் படத்தில்நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.அடுத்த மாதம் 2ம் தேதியுடன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிகிறது.

டிசம்பருக்குள் படத்தை முடித்து, பொங்கலுக்குப் படத்தை வெளியிட ராஜசேகரன்திட்டமிட்டுள்ளார். படத்தில் நடித்து வருவது குறித்து சத்யராஜ் கூறுகையில்,

என்னை சும்மா தேர்ந்தெடுத்து விடவில்லை. எனது பழைய புகைப்படங்களைவாங்கிப் பார்த்து, நான் பொருத்தமானவன்தான் என்பதை உணர்ந்த பின்னரேபெரியார் வேடத்தில் நடிக்க என்னைத் தேர்ந்தெடுத்தார்கள்.

இதற்கு முன்பு 175 படங்களில் நடித்து விட்டேன். எல்லாப் படத்திலும், கிண்டலும்,கேலியும் கூத்தாடின. தகடு தகடு போன்ற வசனங்களை பேசினேன். ஆனால்இப்படத்தில் அப்படி இருக்காது. பெரியார் பேசியததைத்தான் நான் பேசப்போகிறேன்.

பெரியார் பேசியதை டேப்பில் போட்டுப் பார்த்துக் கேட்டு அதை அப்படியே பேசப்போகிறேன். முன்னாடி பழனிக்கு அடிக்கடி போய் மொட்டை போடுவேன்.திருப்பதியில் கூட ஒருமுறை போட்டுள்ளேன்.

அப்புறம் தான் நாத்திகனானேன். இப்போது பெரியாருக்காக தினசரி மொட்டைபோட்டுக் கொண்டிருக்கிறேன். (சத்யராஜுக்கு மொட்டை போடுவதும் பெரியகஷ்டமில்லை, முன் தலையில் ஒண்ணும் இல்லை. பின் பகுதியில் மட்டும்எடுத்துவிட்டால் போதும்).

அதேபோல எனது உடலில் குறிப்பாக நெஞ்சில் மண்டிக் கிடக்கும் முடியையும்தினமும் ஷேவிங் செய்து அகற்றி விடுகிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக பெரியாராக மாறி வருகிறேன் என்றார் சத்யராஜ்.

முன்னதாக, பெரியார் படத்திற்கு ரூ. 95 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவித்தமுதல்வர் கருணாநிதியை அவரது சிஐடி காலனி வீட்டுக்குச் சென்று சந்தித்த தி.க.தலைவர் வீரமணி, சத்யராஜ், இயக்குனர் ஞானராஜசேகரன் ஆகியோர் நன்றிதெரிவித்துக் கொண்டனர்.

Read more about: sathyaraj becoming periyar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil