இப்படி எடுத்தா படம் எப்படிடா ஓடும்.. சத்யராஜ் பேச பேச.. வயிறு குலுங்க சிரித்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: மறைந்த இயக்குநர் வேலு பிரபாகாரனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நடிகர் சத்யராஜ் கடவுள் நம்பிக்கை தேவையற்றது என்றும் நல்ல சினிமாவை எடுத்தால் மக்கள் பார்ப்பார்கள் என்றும் பேசிய நிலையில், அந்த நினைவேந்தலில் பங்கேற்ற ப்ளூ சட்டை மாறன் சிரித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடவுள் எனும் படத்தை இயக்கி தமிழ் சினிமாவை மட்டுமின்றி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் தான் வேலு பிரபாகரன். அமீர்கான் எடுத்த பிகே படத்திற்கே இந்த படம் தான் முன்னோடி என்றும் சத்யராஜ் மேடையில் பேசியுள்ளார்.

Sathyaraj atheism speech makes Blue Sattai Maran laugh

கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் வாழ்க்கையில் சந்தோஷமாகவும் ஜாலியாகவும் இருக்கலாம். நீங்க ஜாலியா இருக்கவாவது பகுத்தறிவுடன் இருங்க என பெரியாரின் கருத்துக்களை நிகழ்ச்சியில் பேசினார்.

எடிசன் ஊர்ல தென்னை மரமே இல்லை: சினிமாவை கண்டுபிடித்ததாக சொல்லப்படும் தாமஸ் ஆல்வா எடிசன் ஊருக்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். அவர் சினிமாவை கண்டுபிடித்தாரா இல்லை லூயிஸ் பிரதர்ஸ் கண்டுபிடித்தாரா என அதிலேயே ஒரு பிரச்சனை இருக்கு, அதற்குள் போக விரும்பவில்லை. எடிசன் பிறந்த ஊர்லையே தென்னை மரம் இல்லை. ஆனால், நம்ம ஆளுங்க படத்துக்குப் பூஜை போடுறேன் என கேமரா முன்னாடியே தேங்காயை உடைக்கிறாங்க.. புகை போடுறாங்க, லென்ஸ் பாதிச்சா, படமே எடுக்க முடியாதுன்னு தனக்கே உரித்தான பாணியில் நய்யாண்டியாக பேசினார் சத்யராஜ்.

எப்படிடா படம் ஓடும்: எப்படியாவது பாஸ் பண்ணு கடவுளேன்னு சொன்னா எப்படி பாஸ் பண்ண வைப்பாரு, நீ நல்லா படிச்சா பாஸ் ஆகலாம். எப்படியாவது வியாபாரம் நல்லா போகணும்னு வேண்டுனா எப்படி நடக்கும். நீ நல்லா உழைச்சா வியாபாரம் நல்லா வரும். எப்படியாவது படம் ஓடணும்னு பூஜை போடுவது, கோயில் கோயிலாக சென்று சாமி கும்பிட்டால், எப்படி படம் ஓடும். படம் நல்லா எடுத்தா ஓடும். ஓடிய சில படங்களையே 6 மாதம் கழித்துப் பார்த்தால், இதெல்லாம் இந்தளவுக்கு ஓடினதே பெரிய விஷயம்னு தோணும் என்று சத்யராஜ் பேசியதும் ப்ளூ சட்டை மாறன் சிரித்து விட்டார்.

வயிறு குலுங்க சிரித்த ப்ளூ சட்டை மாறன்: வேலு பிரபாகரன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ப்ளூ சட்டை மாறன் சத்யராஜ் பேசுவதை கேட்டு சிரித்த காட்சிகளையும் கேமராக்கள் தவறாமல் படம் பிடித்து காட்டியுள்ளன. வழக்கமாக, சினிமா விமர்சனங்களை நாம தான இப்படி சொல்லுவோம். சத்யராஜ் இப்படி பொளந்துக் கட்டுறாரே என நினைத்து சிரித்து இருப்பார் என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

எந்த மத நம்பிக்கையும் இல்லை: கடவுள் நம்பிக்கை இல்லை என்று நான் சொன்னால், இந்து மதத்தை மட்டுமே தாக்கிப் பேசுவதாக சொல்கின்றனர். ஆனால், எனக்கு எந்த மத நம்பிக்கையுமே இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் வாழ்க்கையில் சந்தோஷமாகவும் ஜாலியாகவும் இருக்கலாம். உங்கள் சுயநலத்துக்காவது நீங்க ஜாலியா இருக்கிறதுக்காவது பகுத்தறிவோட இருங்க. சாமி மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான் கயிறு கட்டிக் கொண்டு திரிவார்கள் என சத்யராஜ் பேசிய நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X