அட கூலி படத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.. என்ன கேரக்டர் தெரியுமா?.. ரசிகர்கள் ஆச்சரியம்
சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கவிருக்கும் சூழலில் சத்யராஜ் இதில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து ஜெயிலர் படமும், கெஸ்ட் ரோலில் நடித்து லால் சலாம் படமும் கடைசியாக வெளியாகின. இவற்றில் ஜெயிலர் மெகா ஹிட்டானது. ஆனால் லால் சலாமோ வழுக்கி விழுந்துவிட்டது. இதற்கிடையே ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் ரஜினிகாந்த். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படத்துக்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வேட்டையன் ரிலீஸ்: படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோ நடிக்கின்றனர். ஜெய் பீம் படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்தவர் ஞானவேல் என்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தின் டைட்டில் டீசரும் நல்ல வரவேற்பையே பெற்றது. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என்று சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷூட்டிங் ஓவர்: வேட்டையன் படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி, மும்பை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்துவந்தது. ரஜினிகாந்த்தும் முழு மூச்சுடன் அதில் நடித்துவந்தார். படத்தில் அவருடைய போர்ஷனுக்கான ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்புதான் முடிவடைந்தது. நிச்சயம் இந்தப் படம் ரஜினிகாந்த்தின் கரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
கூலி: இதற்கிடையே கோலிவுட்டின் தற்போதைய மோஸ்ட் வாண்டட் இயக்குநராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தார். அடுத்து அவர் இயக்கிய லியோ படம் சறுக்கியது. சூழல் இப்படி இருக்க ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்குகிறார் அவர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கமலுக்கு கொடுத்த மெகா ஹிட் போல ரஜினிக்கும் லோகேஷ் மெகா ஹிட் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
புதிய தகவல்: படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க கூலி படத்தில் சத்யராஜ் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இதில் அவர் ரஜினிக்கு நண்பராக நடிக்கவிருக்கிறார். இதனை சத்யராஜே உறுதிப்படுத்தியிருக்கிறார். இருவரும் இணைந்து மிஸ்டர் பாரத் படத்தில் ஏற்கனவே நடித்திருந்தார்கள். அதற்கு பிறகு சில காரணங்களால் இருவரும் நடிக்கவில்லை. ரஜினி மீது இருந்த வருத்தத்தின் காரணமாகத்தான் சிவாஜி படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் சத்யராஜ் நிராகரித்தார் என்று சொல்லப்பட்டது, இப்போது ரஜினியுடன் சத்யராஜ் நடிப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











