சனாதனம் ஒழிய வேண்டும்.. சட்டமன்ற உதயநிதிக்கு பேச்சு.. Hats off என புகழ்ந்த சத்யராஜ்!
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று இரண்டாவது நாளாக கூடியது. இதில், உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 'மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் பேசினார். இதை நடிகர் சத்யராஜ், என்ன கெத்து Hats off உதய் என பாராட்டி உள்ளார்.
சட்டப்பேரவை: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது பேசியவர் உதயநிதி, நடந்து முடிந்த தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை ஆளுங்கட்சிக்கு மக்கள் வழங்காமல் போனாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமையில் தேர்தலை சந்தித்து வென்ற தோழமை கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கக்கூடிய புதிய அரசுக்கும் மாண்பு முதலமைச்சராக இருக்கும் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். வெல்க தமிழ்... வாழ்க தமிழ்நாடு... மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிய வேண்டும் என்று பேசினார். இதனால், சட்டமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

என்ன கெத்து: இதை வெகுவாக பாராட்டிய சத்யராஜ், என் அன்புத் தம்பி மானமிகு உதயநிதி எதிர்க்கட்சி தலைவராக முதல் முறையாக ஆற்றிய உரையை கேட்டேன். கடமை தவறாமல், கண்ணியம் தவறாமல், கட்டுப்பாடு குறையாமல் செயல்படுகிறார். அதேசமயம் அவருடைய தைரியத்தையும் பாராட்டுகிறேன். மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று முழங்கும்போது, அவருடைய கெத்து தெரிகிறது. அப்படிச் சொன்னால்தான் இன்றைய இளைய தலைமுறைக்கு புரியும். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற வார்த்தைக்குள் சமூக நீதி காக்கப்பட வேண்டும் என்ற அர்த்தமும் அடங்கியுள்ளது.
Hats off உதய்: அவருடைய தைரியத்தை பார்க்கும்போது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.
'ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
ஆணைகள் இட்டு யார் தடுத்தாலும் அலைகள் ஓய்வதில்லை.' உதய்... ஹேண்ட்ஸ் ஆஃப் டூ யூ.. என்று வெகுவாக பாராட்டிப் பேசியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications