ரஜினிகாந்த் தூங்கும் போது அப்படியே பார்த்துட்டு நின்னேன்.. கூலி இசை வெளியீட்டு விழாவில் சத்யராஜ்!
கூலி பட வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ், ரஜினிகாந்தின் ஸ்டைல் மற்றும் லோகேஷ் கனகராஜ் உடனான நகைச்சுவை உரையாடல் பற்றி பேசினார். ரஜினியின ஸ்டைல், க்ளோசப் ஷாட் ஸ்டைல் என பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து, அரங்கத்தை சிரிப்பலையில் ஆழ்த்தினார். சத்யராஜின் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
நடிகர் சத்யராஜ் கூலி திரைப்பட ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியது அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக, ரஜினி சாருடன் நடித்த அனுபவங்களையும், அவரது ஸ்டைலைப் பற்றியும் அவர் பேசிய சில விஷயங்கள் அரங்கத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
லோகேஷ் கனகராஜ், கதை சொல்ல வந்தபோது, "சார், நீங்க கடைசியா ரஜினி சார்கூட எப்ப நடிச்சீங்க?" என்று கேட்டாராம். "மிஸ்டர் பாரத்" படத்தில் நடித்ததாகவும், அது 1986-ல் வந்தது என்றும் சத்யராஜ் பதிலளித்தார். அதற்கு லோகேஷ், "அப்பதான் சார் நான் பொறந்தேன்" எனச் சொல்லியது அரங்கத்தில் சிரிப்பலையை உண்டாக்கியது.

சத்யராஜ் இதுவரை 47 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். முதல் படம் "சட்டம் என் கையில்" (1978). ஆனால் ரஜினி சார் 50 வருடமாக சூப்பர் ஸ்டாராகவே இருக்கிறார். எல்லாரும் ரஜினி சாரோட ஸ்டைல பத்தி பேசுவாங்க. அவர் சூப்பர் ஸ்டார் இல்ல, சூப்பர் ஆக்டர். ஒரு நடிகர் நல்ல விஷயத்தை பேசாம, ஸ்டைல பத்தியே பேசுறாங்க. அவர்கிட்ட எல்லாமே வொர்க்-அவுட் ஆகும்.
"ஸ்டைல்னா சிகரெட் வீசுனா ஸ்டைல், கூலிங் கிளாஸ் திருப்பி போட்டா ஸ்டைல், துண்டை போட்டா ஸ்டைல்" என ரஜினி அவர்களின் ஸ்டைல் குறித்து பேசினார் சத்யராஜ். மேலும், மற்ற நடிகர்கள் சண்டை காட்சிகளில் நடிக்கும்போது, ரஜினி சார் க்ளோசப் ஷாட்டில் திரும்பி பார்த்தாலே சண்டைக்காட்சி போல இருக்கும் என குறிப்பிட்டார்.
ரஜினி சாருடன் "நான் சிவப்பு மனிதன்", "தம்பிக்கு எந்த ஊரு" உட்பட ஏழு படங்களில் வில்லனாக நடித்துள்ளேன். இந்த படத்தில் அவருக்கு நண்பனாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் ஓகே சொல்லி நடித்தேன். 50 வருஷம் ஆகியும் அவர்கிட்ட மாறாத குவாலிட்டி ஸ்டைல் தான். தூங்கும்போது கூட அவர் ஸ்டைலாக இருப்பார் என சத்யராஜ் தெரிவித்தார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு பெஞ்சில் வெறும் கையை வைத்துக் கொண்டு ரஜினி தூங்குனதை பார்த்து அப்படியே நின்னு ஒரு மனுஷன் தூங்கும் போது கூட ஸ்டைலா இருக்க முடியுமா என்று சொன்னேன் என சத்யராஜ் பேசினார்.
சத்யராஜ்ஜின் நகைச்சுவையான பேச்சுக்கும், ரஜினி மீதான அவரது அன்பான கருத்துக்கும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Click it and Unblock the Notifications











