நானும் ரஜினியும் அரட்டை அடித்தோம்.. செம ஷாக் ஆனார்.. கூலி சீக்ரெட் சொன்ன சத்யராஜ்

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற சூழலில் இப்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில்; சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூலி பட செட்டில் நடந்ததை கூறினார்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன், லால் சலாம் (கெஸ்ட் ரோல்), ஜெயிலர் ஆகிய படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங்களில் லால் சலாம் படுமோசமான தோல்வியை சந்தித்தது. அதேசமயம் ஜெயிலர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முக்கியமாக அவரது சூப்பர் ஸ்டார் நாற்காலி ஆட்டம் கண்டுவிட்டதாக பலரும் சொன்ன சூழலில்; ஜெயிலர் பெற்ற வெற்றியும், அது செய்த வசூலும் ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தியது.

rajinikanth sathyaraj coolie

வேட்டையன்: அதேபோல் பெரும் எதிர்பார்ப்போடு வேட்டையன் திரைப்படம் வெளியானது. ஜெய்பீம் இயக்குநரின் படைப்பு என்பதால் எந்த மாதிரியான படமாக இருக்கும் என்று ஆவல் அதிகரித்திருந்தது. ஞானவேல் தனக்கேயுரிய சமூக பார்வையுடனும், ரஜினிக்குரிய மாஸ் எலிமெண்ட்ஸோடும் படத்தை கொடுத்திருந்தார். இருந்தாலும் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. அதேசமயம் இந்த மாதிரியான கதையில் நடித்ததற்காக ரஜினிகாந்த்தை பலரும் பாராட்டினார்கள்.

கூலி ரஜினிகாந்த்: வேட்டையன் படத்தை முடித்திருக்கும் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். வழக்கம்போல் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அவர் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். ஏற்கனவே தளபதி படத்தில் ரஜினிகாந்த் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சத்யராஜ்: அதேபோல் இப்படத்தில் சத்யராஜ் இணைந்திருப்பதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் சத்யராஜுக்கு ரஜினியை சுத்தமாக பிடிக்காது; சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜிடம் கேட்டபோது; எனக்கு ஒரு படத்தில் ரஜினிகாந்த் வில்லனாக நடிப்பாரா என்று அவர் கேட்டதாக தகவல்கள் உண்டு. ஆனால் அதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. இப்போது ரஜினியுடன் சத்யராஜ் இணைந்திருப்பதால் இருவரின் காம்போ அதகளம் செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏற்கனவே மிஸ்டர் பாரத், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள்.

சத்யராஜின் பேட்டி: இந்நிலையில் சத்யராஜ் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், "கூலி படத்தில் ரஜினியுடன் நடிப்பது எனக்கு ரொம்பவே ஜாலியாக இருக்கிறது. இருவரும் அமர்ந்து பழைய நாட்களில் நடந்ததை பற்றி அரட்டை அடித்தோம். பிறகு உடல்நிலையை சரியாக வைத்துக்கொள்வதற்கு என்ன மாதிரியான ஒர்க் அவுட் செய்கிறீர்கள் என்று அவர் என்னிடமும், அவரிடம் நானும் கேட்டுக்கொண்டோம். பிறகு எனது வயது 70 என்று தெரிந்தவுடன் என்னது உங்களுக்கு 70 வயதா என்று ஷாக் ஆனார்.

45 வருடங்கள்: நான் உடனே 'சார் நானும் 45 வருடங்களாக நடித்துக்கொண்டிருக்கிறேன்' என்றேன். பழைய பிளாஷ்பேக்குக்குள் நாங்கள் சென்று வந்தோம். அவருடன் நான் முதல் படம் மூன்று முகம். பிறகு மிஸ்டர் பாரத், பாயும் புலி, நான் சிகப்பு மனிதன், நான் மகான் அல்ல, ராகவேந்திரா, தம்பிக்கு எந்த ஊரு என 7 படங்கள் வரை நடித்துவிட்டேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X