ஹீரோ .. ஹீரோ ..

By Staff

பாலைவன ரோஜாக்கள் படத்திற்குப் பிறகு கருணாநிதி வசனத்தைப் பேசி நடிக்கும் வாய்ப்பை மீண்டும்பெற்றுள்ளார் சத்யராஜ். கூடவே அவரது மகன் சிபிராஜும் நடிக்கவுள்ளார்.

வில்லனாக அறிமுகமாகி கிட்டத்தட்ட கடந்த 25 ஆண்டுகளாக பல அவதாரங்களில் கலக்கியவர் சத்யராஜ்.வில்லனாக நடித்தபோதும், ஹீரோவாக நடித்தபோதும், காமெடி செய்தபோதும், ஆக்ஷன் ஹீரோவாகவந்தபோதும் நடிப்பில் அழுத்தமான முத்திரை பதித்தவர் சத்யராஜ்.

கடந்த இரண்டு வருடங்களாக அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர், இப்போது அய்யர் ஐ.பி.எஸ்.,மகாநடிகன், படவா, செல்வா இயக்கத்தில் ஒரு படம் என ரொம்ப பிஸி.

அதேபோல் திரையுலகில் இருந்து விலகியிருந்த திமுக தலைவர் கருணாநிதியும் திரைப்படங்களுக்கு வசனம்எழுதுவதில் தற்போது தீவிரமாகி விட்டார். கண்ணம்மா படத்திற்கான வசனத்தை எழுதி முடித்தவர், இப்போதுஇன்னொரு படத்திற்கு வசனம் எழுதப் போகிறார்.

மண்ணின் மைந்தன் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்கப் போவது ராம. நாராயணன் என்பதைமுன்பே சொல்லியிருந்தோம். இப்போது இந்தப் படத்தில் சத்யராஜ், சிபிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள் என்பதுதெரியவந்துள்ளது.

பாலைவன ரோஜாக்கள் படம் பெரு வெற்றியைப் பெற்றது போல மண்ணின் மைந்தனும் பெரும் வெற்றியைப்பெறும் என ராம. நாராயணன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஒன் டைம் பிரதர் என பெயரிடப்பட்டுள்ள ஆங்கிலப்படத்தில் சத்யராஜ் நடிக்கிறார். இந்தப்படத்தை ஜெயபாரதி இயக்கப் போகிறார். இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரவர் சொந்தக் குரலில்,இந்திய ஆங்கிலத்தில்தான் பேசப் போகிறார்கள்.

இன்னும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கப் போகும் இந்தியா எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்துஅதன் அடிப்படையில் இந்த படத்தின் கதை புனையப்பட்டுள்ளதாம்.

இந்த வேடம் குறித்து சத்யராஜ் கூறுகையில், இது மிகவும் அற்புதமான கதை. மிகவும் வித்தியாசமாக இருக்கும்.சிறப்பாக நடிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. நான் இத்தனை வருடங்களில் நடித்த படங்களை விட இந்தப் படம் மிகச்சிறப்பாக வரும் என்று நம்புகிறேன்.

கலைப் படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவும் இப்போது இதன் மூலம் நிறைவேறப்போகிறது. இந்தப் படம் உலக அளவில் பல விருதுகளை குறி வைத்து எடுக்கப்படவுள்ளது. ஆனால் சினிமாரசிகர்களையும் கவரும் விதத்தில் நிச்சயம் படம் இருக்கும், ஏனென்றால் படத்தில் நான் இருக்கிறேனே என்கிறார்சத்யராஜ்.

ஆர்ட் படத்தில் சத்யராஜ் என்பதை நனைக்கவே ஆச்சயமாக உள்ளது. படம் வரட்டும் பார்ப்போம்!


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X