twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோ .. ஹீரோ ..

    By Staff
    |

    டோப்பா முடியை மாற்றிய நேரமோ என்னவோ தெரியவில்லை. சத்யராஜின் படங்கள் ஓரளவு ஓடஆரம்பித்துள்ளன.

    சத்யராஜ் ஜோடியில்லாமல் நடித்து வெளியாகியுள்ள சேனா நன்றாக வசூலைத் தருவதாக தகவல்வந்துள்ளதால், "பார்ட்டி" படு உற்சாகமாக உள்ளாராம்.

    சமீப காலமாக சத்யராஜ் தனது பாணியை மாற்றிக் கொண்டுள்ளார். நெற்றி வரை டோப்பா முடிவைத்துக் கொண்டு தன்னை காலேஜ் பாய் மாதிரி காட்டிக் கொள்ள ரொம்பவே கஷ்டப்பட்டு வந்தார்.

    இப்போது டோப்பாவை மாற்றிவிட்டார். அரை வழுக்கை தெரியும் அளவுக்கு வயதுக்கேற்ற ஏறுநெத்திடோப்பாவுக்கு போய்விட்டார்.

    கெட்-அப்பை மாற்றிய பிறகு இவரது சமீப காலபடங்கள் தொடர்ந்து ஓரளவு லாபம் கொடுத்துவருவதால், மனிதருக்கு படங்கள் கையில் இருந்து கொண்டே இருக்கின்றன

    சமீபத்திய மிலிட்டரி படம் சுமாராகப் பானது. இப்போது சேனா கொஞ்சம் நன்றாகவேபோவதாக செய்திகள் வந்துள்ளதால், சத்யராஜ் ரொம்ப சந்தோஷமாக உள்ளாராம்.

    இனிமேல்விதவிதமான கெட்டப்பில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். அதேபோல, ஜோடியும்அவசியம் இல்லை என்றும் கூறி விட்டாராம். (அப்பாடா, இனிமேல், ரம்பாவும் சத்யராஜும் டூயட்பாடும் கர்ண கொடூரத்தை பார்க்க வேண்டி இருக்காது!).

    இது தவிர தனது மகன் சிபிராஜுடன் விரைவில் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கவும் திட்டமிட்டுள்ளார்சத்யராஜ். இதில் அப்பா- மகன் வேடத்திலேயே இருவரும் நடிக்கப் போகிறார்கள்.

    இந்த சத்யராஜ் டோப்பா மாற்றியது மாதிரி பிரபுவும் மாத்திவிட்டு வயதுக்கெற்ற டோப்பாவைப்போட்டுக் கொண்டால் நல்லது. இப்போது பிரபுவின் டோப்பா முடி இமைகளுக்கு கொஞ்சம்மேலேயே ஆரம்பித்துவிடுகிறது. அதைக் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி தலையில் இருந்துஆரம்பித்தால் பிரபுவை பார்ப்பவர்கள் சிரிப்பதைத் தவிர்க்க முடியும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X