ஹீரோ .. ஹீரோ ..
அடிதடி படம் ரிசல்ட் நல்லபடியாக வந்துள்ளதால் சத்யராஜ் அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார்.
சத்யராஜ் கதாநாயகனாக டூயட் பாடி நடித்த படங்களை விட அவர் வித்தியாசமான கெட்-அப்பில் நடித்தபடங்களே அதிகம் வெற்றி பெற்றிருக்கின்றன, அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரையும் சம்பாதித்துக்கொடுத்துள்ளன.
பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, அமைதிப்படை, என்னம்மா கண்ணு ஆகிய படங்களைஇதற்கு உதராணமாகக் கூறலாம். இப்போது அவர் நடித்து வெளிவந்திருக்கும் அடிதடி படமும் அந்த வகையில்அமைந்த படம்தான். விக் இல்லாமல் வழுக்கைத் தலையுடன் 50 வயது அடிதடிப் பேர்வழியாக நடித்துள்ளார்.
50 வயதில் ஒரு கல்லூரி மாணவி ரதியைப் பார்த்து காதல் வயப்படுகிறார் சத்யராஜ். ரதியைக் காதலிக்கவைப்பதற்காக சத்யராஜ் பண்ணும் லொள்ளுத்தனங்களை ஜாலியாக செய்திருக்கிறார் டைரக்டர் ஷிவ்ராஜ்.
வில்லத்தனமான வேடங்கள் என்றால் சத்யராஜுக்கு அல்வா சாப்பிடுவது போல. மனிதர் அநாயசமாகசெய்திருக்கிறார். அதிலும், கவிதையே தெரியுமா பாடலைப் பார்த்துவிட்டு சத்யராஜ் காணும் கனவுக்கும்,காதலிப்பதற்கு தனது அடியாட்கள் தரும் யோசனைகளை செயல்படுத்தும் காட்சிகளிலும் தியேட்டரில் விசில்பறக்கிறது.
படம் நல்லபடியாக ஓடுவதாக எல்லா ஏரியாக்களிலும் இருந்து ரிசல்ட் வந்துள்ளது.
இதனால் குஷியான தயாரிப்பாளர் அடிதடி டீமை வைத்து தனது அடுத்த படத்துக்கு பூஜை போட்டுவிட்டார்.சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குவது அதே ஷிவ்ராஜ். படத்துக்கு எம்.ஜி.ஆர் ரசிகன்என்று பெயரிட்டுள்ளார்கள்.
விக் வைத்துக் கொண்டு கதாநாயகிகளோடு மரத்தைச் சுற்றி டூயட் பாடினால் எனக்கே சிரிப்பு வருகிறது. இனிமேல்இந்த மாதிரி கதைகள்தான் நமக்கு சரி என்கிறார் சத்யராஜ்.
கேப்டன் கவனிக்கவும்!


Click it and Unblock the Notifications











