ஹீரோ .. ஹீரோ ..
இப்போது கோலிவுட்டில் அதிக படங்கள் கைவசம் வைத்திருக்கும் ஹீரோ தனுஷ் அல்ல, சத்யராஜ்தான்.
அடிதடி படத்தின் சுமாரான வெற்றிக்குப்பின் சத்யராஜ் காட்டில் அடை மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
மொத்தம் 7 புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து பயங்கர பிஸியாகி விட்டார்.
ஜோர், எம்.ஜி.ஆர். ரசிகன், சுயேட்சை எம்.எல்.ஏ, அழகேசன் மற்றும் பெயரிடப்படாத 3 படங்கள் என 7படங்களில் நடிக்கிறார்.
ஜோர் படத்தில் மகன் சிபியுடன் இணைந்து நடிக்கிறார். அடிதடி யூனிட்டின் அடுத்த படம்தான் எம்.ஜி.ஆர். ரசிகன்.
அழகேசன் படத்தில் இவருக்கு கன்னட திரையுலகைச் சேர்ந்த பிரேமா தான் ஜோடியாக நடிக்கிறார்.
இவர்களுடன் பிதாமகனில் வில்லனாக நடித்த மகாதேவன், டெல்லி கணேஷ், கெளதமியும் நடிக்கிறார்கள். படத்தில்இசையமைப்பாளர் தேவா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
சுயேச்சை எம்.எல்.ஏ. படத்தில் மந்த்ரா நடிக்கிறார். ஆனால், ஹீரோயின் வேறு ஒருவராம்.
மந்த்ராவுக்கு படத்தில் வேலை மந்தகாசமாய் கவர்ச்சி காட்டுவதாம்.
அழகேசன், எம்ஜிஆர் ரசிகன் உட்பட எல்லா படங்களிலும் சத்யாராஜூக்கு லொள்ளுத்தனம் கலந்தவேடங்களாம். அதனால் குஷியாக இருக்கிறார் சத்யராஜ்.
தனக்கு மீண்டும் சான்ஸ் கிடைத்துள்ளது குறித்து சத்யராஜ் சந்தோஷமடைந்தாலும், தனது மகன் சிபியின் சினிமாவாழ்க்கை குளத்தில் போட்ட கல்லாக இருப்பதில் வருத்தமாக இருக்கிறாராம்.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் கதி,சிபிக்கும் நேர்ந்து விடுமோ என்று கவலையில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











