»   »  ஹா.. இன்னொரு சந்திரமுகி சந்திரமுகியில் ஜோதிகாவின் உருட்டு விழியையும், கர்ஜிக்கும் குரலையும், அவரது கற்பனைப் பேய் மானரிஸத்தையும் கண்டுநீங்கள் பயந்தீர்களோ இல்லையோ, இப்போது புதிதாய் புறப்பட்டிருக்கும் ஆஜானுபாகு சந்திரமுகியைப் பார்த்தால் நீங்கள்நிச்சயம் அலறியடித்துக் கொண்டு ஓடாமல் இருக்க மாட்டீர்கள்.6 அடி உயரத்தில், 110 கிலோ எடையில், சும்மா மாட்டுத் தொடை மாதிரி ஆர்ம்ஸ்களுடன், சேலை கட்டி, தெலுங்கு பாட்டுக்கு,ஒரு உருவம் கும்மு கும்மு என்று பரத நாட்டியம் போட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள். தெறித்து ஓட மாட்டீர்கள்?இந்த வேண்டாத வேலையைச் செய்யப் போவது நம் சத்யராஜ். மனோதத்துவ டாக்டராக இருந்து அவருக்குப் பேய் ஓட்டப்போவது ரஜினி அல்ல, நம்ம வடிவேலு.சக நடிகர்களின் மொழிப் பற்று, அரசியல் ஆசை என கோடம்பாக்கத்தின் கோமாளித்தனங்களை தனது படங்களில் திணித்துவெளுத்துக் கட்டி வருபவர் சத்யராஜ். இதனால் விஜய்காந்த் போன்றவர்கள் அவருக்கு வாயாலேயே சாம்பிராணி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.ஆனாலும் சக நடிகர்களின் காச்மூச்களை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் அவர்களை மீண்டும் சுரண்டிப் பார்க்ககிளம்பிவிட்டார் சத்யராஜ்.மகா நடிகன் படத்தின் மூலம் நடிகர்களை தோலுறித்த சத்யராஜ்- இயக்குனர் ஷக்தி சிதம்பரம் காம்பினேஷனில் உருவாகி வரும்இங்கிலீஷ்காரன் படத்தில் மீண்டும் கோடம்பாக்கத்தின் மறைவுப் பகுதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டப் போகிறார்களாம்.இதில் நமிதா, மதுமிதா என இரண்டு பெண் பிள்ளைகளுடன் ஜோடி போட்டுக் கொண்டு லூட்டு அஅடித்து வரும் சத்யராஜ், ஒரு காட்சியில் சந்திரமுகி ஜோதிகாவாக நடிக்க இருக்கிறார்.கதைப்படி இவர் போகக் கூடாத ஒரு பங்களாவுக்குள் போக, அங்கிருக்கும் பெண் டான்ஸ் பேய் சத்யராஜைப் பிடித்துக்கொள்கிறது. இதனால் திடீரென பரதநாட்டியம் எல்லாம் சத்யராஜுக்கு அத்துப்படியாகிவிடுகிறது.அங்கே இங்கே சேலைகளை அபேஸ் செய்து கட்டிக் கொண்டு அவர் பாட்டுக்கு டன்டனக்கா.. டனக்கனக்கா என(பரதநாட்டியமாம்) ஆட்டமாய் ஆட, அவரது பிரச்சனையை தீர்த்து வைக்க வருகிறார் டாக்டர் வடிவேலு. தனது மனோவசிய திறமையை சத்யராஜிடம் காட்டப் போய், பேய் என்ற போர்வையில் அவரை சத்யராஜ் போட்டுத் தாக்குவதுபோல போகிறதாம் காட்சிகள்.அப்படியே சந்திரமுகி ரஜினி-ஜோதிகா சீன்களை மடக்கிப் போட்டு, இதில் கிண்டலடிக்கப் போகிறார்கள்.இதற்காக சத்யராஜுக்கு ஜோதிகாவைப் போலவே சேலை, நெத்திச் சுட்டி எல்லாம் போட்டுவிட்டு விழிகளை உருட்டி ஆடச்சொன்னபோது, மனோதத்துவ டாக்டர் வடிவேலு மட்டுமல்ல, காமெராமேனும் கூட ஓடினாராம்.

ஹா.. இன்னொரு சந்திரமுகி சந்திரமுகியில் ஜோதிகாவின் உருட்டு விழியையும், கர்ஜிக்கும் குரலையும், அவரது கற்பனைப் பேய் மானரிஸத்தையும் கண்டுநீங்கள் பயந்தீர்களோ இல்லையோ, இப்போது புதிதாய் புறப்பட்டிருக்கும் ஆஜானுபாகு சந்திரமுகியைப் பார்த்தால் நீங்கள்நிச்சயம் அலறியடித்துக் கொண்டு ஓடாமல் இருக்க மாட்டீர்கள்.6 அடி உயரத்தில், 110 கிலோ எடையில், சும்மா மாட்டுத் தொடை மாதிரி ஆர்ம்ஸ்களுடன், சேலை கட்டி, தெலுங்கு பாட்டுக்கு,ஒரு உருவம் கும்மு கும்மு என்று பரத நாட்டியம் போட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள். தெறித்து ஓட மாட்டீர்கள்?இந்த வேண்டாத வேலையைச் செய்யப் போவது நம் சத்யராஜ். மனோதத்துவ டாக்டராக இருந்து அவருக்குப் பேய் ஓட்டப்போவது ரஜினி அல்ல, நம்ம வடிவேலு.சக நடிகர்களின் மொழிப் பற்று, அரசியல் ஆசை என கோடம்பாக்கத்தின் கோமாளித்தனங்களை தனது படங்களில் திணித்துவெளுத்துக் கட்டி வருபவர் சத்யராஜ். இதனால் விஜய்காந்த் போன்றவர்கள் அவருக்கு வாயாலேயே சாம்பிராணி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.ஆனாலும் சக நடிகர்களின் காச்மூச்களை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் அவர்களை மீண்டும் சுரண்டிப் பார்க்ககிளம்பிவிட்டார் சத்யராஜ்.மகா நடிகன் படத்தின் மூலம் நடிகர்களை தோலுறித்த சத்யராஜ்- இயக்குனர் ஷக்தி சிதம்பரம் காம்பினேஷனில் உருவாகி வரும்இங்கிலீஷ்காரன் படத்தில் மீண்டும் கோடம்பாக்கத்தின் மறைவுப் பகுதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டப் போகிறார்களாம்.இதில் நமிதா, மதுமிதா என இரண்டு பெண் பிள்ளைகளுடன் ஜோடி போட்டுக் கொண்டு லூட்டு அஅடித்து வரும் சத்யராஜ், ஒரு காட்சியில் சந்திரமுகி ஜோதிகாவாக நடிக்க இருக்கிறார்.கதைப்படி இவர் போகக் கூடாத ஒரு பங்களாவுக்குள் போக, அங்கிருக்கும் பெண் டான்ஸ் பேய் சத்யராஜைப் பிடித்துக்கொள்கிறது. இதனால் திடீரென பரதநாட்டியம் எல்லாம் சத்யராஜுக்கு அத்துப்படியாகிவிடுகிறது.அங்கே இங்கே சேலைகளை அபேஸ் செய்து கட்டிக் கொண்டு அவர் பாட்டுக்கு டன்டனக்கா.. டனக்கனக்கா என(பரதநாட்டியமாம்) ஆட்டமாய் ஆட, அவரது பிரச்சனையை தீர்த்து வைக்க வருகிறார் டாக்டர் வடிவேலு. தனது மனோவசிய திறமையை சத்யராஜிடம் காட்டப் போய், பேய் என்ற போர்வையில் அவரை சத்யராஜ் போட்டுத் தாக்குவதுபோல போகிறதாம் காட்சிகள்.அப்படியே சந்திரமுகி ரஜினி-ஜோதிகா சீன்களை மடக்கிப் போட்டு, இதில் கிண்டலடிக்கப் போகிறார்கள்.இதற்காக சத்யராஜுக்கு ஜோதிகாவைப் போலவே சேலை, நெத்திச் சுட்டி எல்லாம் போட்டுவிட்டு விழிகளை உருட்டி ஆடச்சொன்னபோது, மனோதத்துவ டாக்டர் வடிவேலு மட்டுமல்ல, காமெராமேனும் கூட ஓடினாராம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்திரமுகியில் ஜோதிகாவின் உருட்டு விழியையும், கர்ஜிக்கும் குரலையும், அவரது கற்பனைப் பேய் மானரிஸத்தையும் கண்டுநீங்கள் பயந்தீர்களோ இல்லையோ, இப்போது புதிதாய் புறப்பட்டிருக்கும் ஆஜானுபாகு சந்திரமுகியைப் பார்த்தால் நீங்கள்நிச்சயம் அலறியடித்துக் கொண்டு ஓடாமல் இருக்க மாட்டீர்கள்.

6 அடி உயரத்தில், 110 கிலோ எடையில், சும்மா மாட்டுத் தொடை மாதிரி ஆர்ம்ஸ்களுடன், சேலை கட்டி, தெலுங்கு பாட்டுக்கு,ஒரு உருவம் கும்மு கும்மு என்று பரத நாட்டியம் போட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள். தெறித்து ஓட மாட்டீர்கள்?

இந்த வேண்டாத வேலையைச் செய்யப் போவது நம் சத்யராஜ். மனோதத்துவ டாக்டராக இருந்து அவருக்குப் பேய் ஓட்டப்போவது ரஜினி அல்ல, நம்ம வடிவேலு.

சக நடிகர்களின் மொழிப் பற்று, அரசியல் ஆசை என கோடம்பாக்கத்தின் கோமாளித்தனங்களை தனது படங்களில் திணித்துவெளுத்துக் கட்டி வருபவர் சத்யராஜ். இதனால் விஜய்காந்த் போன்றவர்கள் அவருக்கு வாயாலேயே சாம்பிராணி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் சக நடிகர்களின் காச்மூச்களை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் அவர்களை மீண்டும் சுரண்டிப் பார்க்ககிளம்பிவிட்டார் சத்யராஜ்.

மகா நடிகன் படத்தின் மூலம் நடிகர்களை தோலுறித்த சத்யராஜ்- இயக்குனர் ஷக்தி சிதம்பரம் காம்பினேஷனில் உருவாகி வரும்இங்கிலீஷ்காரன் படத்தில் மீண்டும் கோடம்பாக்கத்தின் மறைவுப் பகுதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டப் போகிறார்களாம்.

இதில் நமிதா, மதுமிதா என இரண்டு பெண் பிள்ளைகளுடன் ஜோடி போட்டுக் கொண்டு லூட்டு அ

அடித்து வரும் சத்யராஜ், ஒரு காட்சியில் சந்திரமுகி ஜோதிகாவாக நடிக்க இருக்கிறார்.

கதைப்படி இவர் போகக் கூடாத ஒரு பங்களாவுக்குள் போக, அங்கிருக்கும் பெண் டான்ஸ் பேய் சத்யராஜைப் பிடித்துக்கொள்கிறது. இதனால் திடீரென பரதநாட்டியம் எல்லாம் சத்யராஜுக்கு அத்துப்படியாகிவிடுகிறது.

அங்கே இங்கே சேலைகளை அபேஸ் செய்து கட்டிக் கொண்டு அவர் பாட்டுக்கு டன்டனக்கா.. டனக்கனக்கா என(பரதநாட்டியமாம்) ஆட்டமாய் ஆட, அவரது பிரச்சனையை தீர்த்து வைக்க வருகிறார் டாக்டர் வடிவேலு.


தனது மனோவசிய திறமையை சத்யராஜிடம் காட்டப் போய், பேய் என்ற போர்வையில் அவரை சத்யராஜ் போட்டுத் தாக்குவதுபோல போகிறதாம் காட்சிகள்.

அப்படியே சந்திரமுகி ரஜினி-ஜோதிகா சீன்களை மடக்கிப் போட்டு, இதில் கிண்டலடிக்கப் போகிறார்கள்.

இதற்காக சத்யராஜுக்கு ஜோதிகாவைப் போலவே சேலை, நெத்திச் சுட்டி எல்லாம் போட்டுவிட்டு விழிகளை உருட்டி ஆடச்சொன்னபோது, மனோதத்துவ டாக்டர் வடிவேலு மட்டுமல்ல, காமெராமேனும் கூட ஓடினாராம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil