»   »  சத்யராஜுக்கு நாலு ஜோடி! லொள்ளு ராஜா சத்யராஜை வைத்து இன்னும் எத்தனை கலக்கல் படங்கள் வரப் போகிறதோ தெரியில்லை, ஆனால் அவரை வைத்துமுடிந்தவரை லொள்ளுத்தனமான படங்களையே கொடுப்பது என்ற தீர்மானத்திற்கே வந்து விட்டார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம்.சத்யராஜை வைத்து தொடர்ந்து காமெடிப் படங்களையே இயக்கி (அத்தனையும் ஹிட் படங்கள்) வரும் ஷக்தி சிதம்பரம், கடைசியாகசத்யராஜை வைத்து இயக்கிய இங்கிலீஷ்காரன் எதிர்பாராத அளவுக்கு மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.இங்கிலீஷ்காரன் யாருக்கும் நஷ்டம் வராமல் லாபத்தைக் கொடுத்து காப்பாற்றியிருக்கிறார் என்று கோலிவுட்டில் சந்தோஷமாக பேசிக்கொள்கிறார்கள். இதனால் சத்யராஜை வைத்து அடுத்து ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார் ஷக்தி சிதம்பரம். இப்படத்திற்கு கோவை பிரதர்ஸ் என்று பெயர் வைத்துள்ளார். இப்படத்தை சினிமா பேரடைஸ் என்ற நிறுவனத்தின் பெயரில்சொந்தமாகவே தயாரிக்கப் போகிறார் ஷக்தி. இப்படத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால் சத்யராஜுக்கு இதில் நான்கு ஜோடிகளாம்.ஒரு ஜோடியைப் போட்டாலே மனுஷன் புகுந்து விளையாடுகிறார், சின்ன வயசு நடிகர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்.இந்த நிலையில் நான்கு ஹீரோயின்களுடன் சத்யராஜ் நடிக்கப் போகிறார் என்பதால் படத்தில் 200 பெர்சன்ட் லொள்ளும், 400 பெர்சன்ட்ஜொள்ளும் இருக்கும் என அடித்துச் சொல்கிறது கோலிவுட்.நான்கு ஹீரோயின்களில் கண்டிப்பாக நமீதா இடம் பெறுவார் என இன்னொரு தரப்பு உறுதியாக சொல்கிறது. காரணம், சத்யராஜின் மனம்கவர்ந்த நடிகையாக நமீதா மாறியுள்ளார் என்பதுதான். நமீதாவும், சத்யராஜ் பெயரைக் கேட்டாலே ரொம்பவும் மரியாதைகாட்டுகிறாராம். அவர் நடித்த பல படங்கள் சரியாக ஓடாத நிலையில் இங்கிலீஷ்காரன் வெற்றிகரமாக ஓடுவதும், அதில் தனது கேரக்டர்பேசப்பட்டதும் அவரை ரொம்பவே நெகிழ வைத்து விட்டதாம். இதனால் சத்யராஜுடன் நடிப்பது என்றால் கால்ஷீட் கண்டிப்பாக ஒதுக்குவேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் உற்சாகத்துடன் கூறிவருகிறார் நமீதா. எனவே கோவை பிரதர்ஸில் கண்டிப்பாக நமீதாவுக்கும் ஒரு இடம் கிடைக்கலாம்.இப்படத்தில் சத்யராஜ் மட்டும் இல்லை, அவரது மகன் சிபியும் கூடவே வரப் போகிறார். இதற்கெல்லாம் உச்சமாக வடிவேலுவையும்போட்டுள்ளார்கள். மூன்று பேரும் சேர்ந்து செய்யும் ஜாலியான கலாட்டாக்கள்தான் படத்தின் கதையாம். ஜாலியான காமெடியுடன் சில சென்டிமெண்ட் காட்சிகளையும் சேர்த்து தட்டி விடவுள்ளாராம் ஷக்தி சிதம்பரம். காதல் படப் புகழ் ஜோஷ்வாஸ்ரீதர் இசையமைக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள்.ஷக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் சிபிராஜ், விக்ராந்த் நடிக்க பட்டாசு என்ற ஒரு படத்திற்கு சில நாட்களுக்கு முன்புதான் பூஜைபோட்டார்கள். அந்தப் படத்தை எடுத்துக் கொண்டே, கோவை பிரதர்ஸையும் சைட் பை சைடாக தயாரித்து இயக்கவுள்ளார் ஷக்தி.

சத்யராஜுக்கு நாலு ஜோடி! லொள்ளு ராஜா சத்யராஜை வைத்து இன்னும் எத்தனை கலக்கல் படங்கள் வரப் போகிறதோ தெரியில்லை, ஆனால் அவரை வைத்துமுடிந்தவரை லொள்ளுத்தனமான படங்களையே கொடுப்பது என்ற தீர்மானத்திற்கே வந்து விட்டார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம்.சத்யராஜை வைத்து தொடர்ந்து காமெடிப் படங்களையே இயக்கி (அத்தனையும் ஹிட் படங்கள்) வரும் ஷக்தி சிதம்பரம், கடைசியாகசத்யராஜை வைத்து இயக்கிய இங்கிலீஷ்காரன் எதிர்பாராத அளவுக்கு மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.இங்கிலீஷ்காரன் யாருக்கும் நஷ்டம் வராமல் லாபத்தைக் கொடுத்து காப்பாற்றியிருக்கிறார் என்று கோலிவுட்டில் சந்தோஷமாக பேசிக்கொள்கிறார்கள். இதனால் சத்யராஜை வைத்து அடுத்து ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார் ஷக்தி சிதம்பரம். இப்படத்திற்கு கோவை பிரதர்ஸ் என்று பெயர் வைத்துள்ளார். இப்படத்தை சினிமா பேரடைஸ் என்ற நிறுவனத்தின் பெயரில்சொந்தமாகவே தயாரிக்கப் போகிறார் ஷக்தி. இப்படத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால் சத்யராஜுக்கு இதில் நான்கு ஜோடிகளாம்.ஒரு ஜோடியைப் போட்டாலே மனுஷன் புகுந்து விளையாடுகிறார், சின்ன வயசு நடிகர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்.இந்த நிலையில் நான்கு ஹீரோயின்களுடன் சத்யராஜ் நடிக்கப் போகிறார் என்பதால் படத்தில் 200 பெர்சன்ட் லொள்ளும், 400 பெர்சன்ட்ஜொள்ளும் இருக்கும் என அடித்துச் சொல்கிறது கோலிவுட்.நான்கு ஹீரோயின்களில் கண்டிப்பாக நமீதா இடம் பெறுவார் என இன்னொரு தரப்பு உறுதியாக சொல்கிறது. காரணம், சத்யராஜின் மனம்கவர்ந்த நடிகையாக நமீதா மாறியுள்ளார் என்பதுதான். நமீதாவும், சத்யராஜ் பெயரைக் கேட்டாலே ரொம்பவும் மரியாதைகாட்டுகிறாராம். அவர் நடித்த பல படங்கள் சரியாக ஓடாத நிலையில் இங்கிலீஷ்காரன் வெற்றிகரமாக ஓடுவதும், அதில் தனது கேரக்டர்பேசப்பட்டதும் அவரை ரொம்பவே நெகிழ வைத்து விட்டதாம். இதனால் சத்யராஜுடன் நடிப்பது என்றால் கால்ஷீட் கண்டிப்பாக ஒதுக்குவேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் உற்சாகத்துடன் கூறிவருகிறார் நமீதா. எனவே கோவை பிரதர்ஸில் கண்டிப்பாக நமீதாவுக்கும் ஒரு இடம் கிடைக்கலாம்.இப்படத்தில் சத்யராஜ் மட்டும் இல்லை, அவரது மகன் சிபியும் கூடவே வரப் போகிறார். இதற்கெல்லாம் உச்சமாக வடிவேலுவையும்போட்டுள்ளார்கள். மூன்று பேரும் சேர்ந்து செய்யும் ஜாலியான கலாட்டாக்கள்தான் படத்தின் கதையாம். ஜாலியான காமெடியுடன் சில சென்டிமெண்ட் காட்சிகளையும் சேர்த்து தட்டி விடவுள்ளாராம் ஷக்தி சிதம்பரம். காதல் படப் புகழ் ஜோஷ்வாஸ்ரீதர் இசையமைக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள்.ஷக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் சிபிராஜ், விக்ராந்த் நடிக்க பட்டாசு என்ற ஒரு படத்திற்கு சில நாட்களுக்கு முன்புதான் பூஜைபோட்டார்கள். அந்தப் படத்தை எடுத்துக் கொண்டே, கோவை பிரதர்ஸையும் சைட் பை சைடாக தயாரித்து இயக்கவுள்ளார் ஷக்தி.

Posted By:
Subscribe to Oneindia Tamil

லொள்ளு ராஜா சத்யராஜை வைத்து இன்னும் எத்தனை கலக்கல் படங்கள் வரப் போகிறதோ தெரியில்லை, ஆனால் அவரை வைத்துமுடிந்தவரை லொள்ளுத்தனமான படங்களையே கொடுப்பது என்ற தீர்மானத்திற்கே வந்து விட்டார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம்.

சத்யராஜை வைத்து தொடர்ந்து காமெடிப் படங்களையே இயக்கி (அத்தனையும் ஹிட் படங்கள்) வரும் ஷக்தி சிதம்பரம், கடைசியாகசத்யராஜை வைத்து இயக்கிய இங்கிலீஷ்காரன் எதிர்பாராத அளவுக்கு மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

இங்கிலீஷ்காரன் யாருக்கும் நஷ்டம் வராமல் லாபத்தைக் கொடுத்து காப்பாற்றியிருக்கிறார் என்று கோலிவுட்டில் சந்தோஷமாக பேசிக்கொள்கிறார்கள். இதனால் சத்யராஜை வைத்து அடுத்து ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார் ஷக்தி சிதம்பரம்.


இப்படத்திற்கு கோவை பிரதர்ஸ் என்று பெயர் வைத்துள்ளார். இப்படத்தை சினிமா பேரடைஸ் என்ற நிறுவனத்தின் பெயரில்சொந்தமாகவே தயாரிக்கப் போகிறார் ஷக்தி. இப்படத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால் சத்யராஜுக்கு இதில் நான்கு ஜோடிகளாம்.

ஒரு ஜோடியைப் போட்டாலே மனுஷன் புகுந்து விளையாடுகிறார், சின்ன வயசு நடிகர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்.இந்த நிலையில் நான்கு ஹீரோயின்களுடன் சத்யராஜ் நடிக்கப் போகிறார் என்பதால் படத்தில் 200 பெர்சன்ட் லொள்ளும், 400 பெர்சன்ட்ஜொள்ளும் இருக்கும் என அடித்துச் சொல்கிறது கோலிவுட்.

நான்கு ஹீரோயின்களில் கண்டிப்பாக நமீதா இடம் பெறுவார் என இன்னொரு தரப்பு உறுதியாக சொல்கிறது. காரணம், சத்யராஜின் மனம்கவர்ந்த நடிகையாக நமீதா மாறியுள்ளார் என்பதுதான். நமீதாவும், சத்யராஜ் பெயரைக் கேட்டாலே ரொம்பவும் மரியாதைகாட்டுகிறாராம். அவர் நடித்த பல படங்கள் சரியாக ஓடாத நிலையில் இங்கிலீஷ்காரன் வெற்றிகரமாக ஓடுவதும், அதில் தனது கேரக்டர்பேசப்பட்டதும் அவரை ரொம்பவே நெகிழ வைத்து விட்டதாம்.


இதனால் சத்யராஜுடன் நடிப்பது என்றால் கால்ஷீட் கண்டிப்பாக ஒதுக்குவேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் உற்சாகத்துடன் கூறிவருகிறார் நமீதா. எனவே கோவை பிரதர்ஸில் கண்டிப்பாக நமீதாவுக்கும் ஒரு இடம் கிடைக்கலாம்.

இப்படத்தில் சத்யராஜ் மட்டும் இல்லை, அவரது மகன் சிபியும் கூடவே வரப் போகிறார். இதற்கெல்லாம் உச்சமாக வடிவேலுவையும்போட்டுள்ளார்கள். மூன்று பேரும் சேர்ந்து செய்யும் ஜாலியான கலாட்டாக்கள்தான் படத்தின் கதையாம்.

ஜாலியான காமெடியுடன் சில சென்டிமெண்ட் காட்சிகளையும் சேர்த்து தட்டி விடவுள்ளாராம் ஷக்தி சிதம்பரம். காதல் படப் புகழ் ஜோஷ்வாஸ்ரீதர் இசையமைக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள்.

ஷக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் சிபிராஜ், விக்ராந்த் நடிக்க பட்டாசு என்ற ஒரு படத்திற்கு சில நாட்களுக்கு முன்புதான் பூஜைபோட்டார்கள். அந்தப் படத்தை எடுத்துக் கொண்டே, கோவை பிரதர்ஸையும் சைட் பை சைடாக தயாரித்து இயக்கவுள்ளார் ஷக்தி.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil