»   »  ரஜினியை நிராகரித்த சத்யராஜ்!

ரஜினியை நிராகரித்த சத்யராஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க வந்த அழைப்பை தான் நிராகரித்து விட்டதாகசத்யராஜ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிப்பில், ஏவி.எம். தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாகஉருவாகும் படம் சிவாஜி. கிட்டத்தட்ட படம் முடியும் தருவாயை நெருங்கி விட்டது.இந்த மாதக் கடைசி வரைதான் ரஜினி கால்ஷீட் கொடுத்துள்ளதால், அவர்சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளை ஜெட் வேகத்தில் படமாக்கி வருகிறார் ஷங்கர்.

சமீபத்தில் கிளைமாக்ஸ் காட்சியை பெங்களூரில் வைத்து சுட்டு முடித்தார் ஷங்கர்.இப்படத்தில் வில்லனாக நடிப்பவர் சுமன். வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரகுவரன்நடிக்கிறார்.

முதலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜைத்தான் அணுகினர். ஆனால்அவர் மறுத்து விட்டார். அதேபோல ரகுவரன் நடிக்கும் கதாபாத்திரத்தில்அமிதாப்பச்சனை நடிக்க வைக்க முயன்றனர். ஆனால் அமிதாப்புக்கு உடல் நலம்ச>யில்லாமல் போனதால் அவரால் நடிக்க முடியவில்லை.

வில்லனாக நடிக்க மறுத்தது குறித்து இப்போது அதிகாரப்பூர்வமாக வாய் திறந்துள்ளார்சத்யராஜ். இதுகுறித்து சத்யராஜ் கூறுகையில், சிவாஜி படத்தில் வில்லன் வேடத்தில்நடிக்க என்னை அணுகினர்.

ஷங்கரே எனது வீட்டுக்கு நேரில் வந்து கதையைச் சொல்லி நீங்கள்தான் நடிக்கவேண்டும் என்று கேட்டார். அதேபோல ஏவி.எம். நிறுவனத்திலிருந்தும் அழைப்புவிடுத்தனர்.

ஆனால் நான் தான் வில்லனாக நடிப்பதை விட்டு விட்டேன். எனவே இதில் என்னால்நடிக்க முடியாது என்பதை விளக்கி நிராகரித்து விட்டேன். இதனால் எங்களுக்குள்எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. நட்போடுதான் நிராகரித்தேன் என்றார்.

பெரியார் எப்படி இருக்கிறார் என்று லொள்ளு ராஜாவிடம் கேட்டபோது, சிறப்பாகவந்துள்ளது பெரியார் படம். பல கெட்டப்களில் இதில் வருகிறேன். மைனராகவருகிறேன், புத்தபிட்சு போலவும் நடித்துள்ளேன். வெண்தாடி, பெரிய மீசை என பல கெட்டப்களில் நடித்துள்ளேன்.

சமீபத்தில் முதல்வரை சந்தித்தபோது, பெரியார் குறித்து நிறையப் பேசினார். பெ>யார்எப்படி நடப்பார், பேசுவார் என்பதை விளக்கியதோடு பெரியார் பேசுவதைப்போலவே பேசியும் காட்டி அசத்தினார் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil