twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சத்யராஜ் படத்தில் பிள்ளையார் நீக்கம்!

    By Staff
    |

    சத்யராஜ் பிள்ளையாரை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்ற அடாவடிபடத்திலிருந்து அந்தக் காட்சியை நீக்கும் வரை தணிக்கைச் சான்றிதழ் தர முடியாதுஎன்று தணிக்கைக் குழுவின் மறு ஆய்வுக் குழுவும் கூறி விட்டது.

    ஒரு திரைப்பட இயக்குநரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்துஎடுக்கப்பட்டுள்ள படம் அடாவடி. இதில் சத்யராஜ் இயக்குநராக நடித்துள்ளார்.அவருக்கு ஜோடிகளாக சுந்தரா டிராவல்ஸ் நாயகி ராதா, சுஜா, பர்வேஸ் ஆகியோர்நடித்துள்ளனர். பரத்ஹண்ணா இயக்கியுள்ளார். சரவணன் தயாரித்துள்ளார்.

    படத்தை முடித்து தணிக்கைக்காக அனுப்பியபோது படத்தில் பல ஆட்சேபகரமானகாட்சிகள் இருப்பதாக தணிக்கைக் குழு கருத்து தெரிவித்தது. மேலும் சில காட்சிகளைமுழுமையாக நீக்க வேண்டும் என அது அறிவுறுத்தியது.

    ஒரு காட்சியில், மன நோய் மருத்துவமனையிலிருந்து குணமாகித் திரும்பும் சத்யராஜ்,காவலாளி, போலீஸ்காரர் ஒருவரை சுட்டுக் கொல்கிறார். பின்னர் அருகில் உள்ளபிள்ளையார் கோவிலுக்கு வருகிறார். பிள்ளையார் சிலைக்கு அருகே துப்பாக்கியுடன்அமர்ந்து, பிள்ளையாரை கடுமையாக விமர்சிக்கிறார். பின்னர் நீ இருக்க வேண்டியஇடம் கடல்தான் என்று கூறுவது போல காட்சி உள்ளது.

    இதேபோல ஒரு பாடல் காட்சியில் பட ஆபாசமான வரிகளும், நடன அசைவுகளும்இருப்பதாக கூறி அதையும் நீக்கக் கோரியது தணிக்கைக் குழு. ஆனால் இப்படத்தின்கன்னட ஒரிஜினல் படத்தில் பிள்ளையாரை நோக்கி ஹீரோ வசனம் பேசுவது போலஉள்ளதாக கூறி அதை நீக்க முடியாது என தயாரிப்பாளர் வாதாடினார்.

    மேலும், படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பினார். மறு ஆய்வுக் குழுவினர் 10பேர் படத்தைப் பார்வையிட்டனர். அவர்களும் பிள்ளையார் சம்பந்தப்பட்ட காட்சியைநீக்குமாறு கூறி விட்டனர். இதையடுத்து அந்தக் காட்சியை எடுக்க இயக்குநர்பரத்ஹண்ணா முடிவு செய்துள்ளார்.

    இதுகுறித்து ஹண்ணா கூறுகையில், கன்னடத்தில் வெளியான படத்தின் ரீமேக்தான்இது. கன்னடத்தில் இந்தக் காட்சி இடம் பெற்றுள்ளது. ஆனால் தமிழில் அனுமதி தரமறுத்து விட்டார்கள்.

    என்ன காரணம் என்று கேட்டபோது, தற்போது தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையைகருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்படுவதாக தணிக்கைக் குழுவினர் தெரிவித்தனர்.நாங்களும் அதைப் புரிந்து கொண்டு பிரச்சினையாக்க விரும்பாததால், காட்சியைநீக்க முடிவு செய்தோம் என்றார்.

    நல்ல வேளை இத்தோடு பிரச்சனை முடிந்தது. இல்லாவிட்டால் திரைக் கிழிப்பு, தியேட்டர்உடைப்புக்கு பிள்ளையார் சுழி போடப்படும் சூழ்நிலை உருவாகியிருக்கும்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X