»   »  எஸ்வி சேகருக்கு சத்யராஜ் கண்டனம்

எஸ்வி சேகருக்கு சத்யராஜ் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

பெரியார் படத்திற்கு தமிழக அரசு நிதியுதவி அளித்திருப்பதை நடிகர் எஸ்.வி.சேகர்விமர்சித்திருப்பதை பெரியார் வேடத்தில் நடிக்கும் சத்யராஜ் கண்டித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு தமிழக அரசு ரூ. 95 லட்சம் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளது.

இதை அதிமுகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் சட்டசபையிலேயே விமர்சித்துப்பேசினார். பெரியார் படத்திற்கு தமிழக அரசு நதியுதவி செய்வதால் இந்தப் படம்அரசுக்குச் சொந்தமாகுமாஅல்லது தனி நபருக்கு சொந்தமாகுமா?

இதேபோல ராஜாஜி, வைத்தியநாத அய்யர்ஆகியோர் பற்றியப் படங்களை எடுத்தால்அதற்கும் தமிழக அரசு உதவி செய்யுமா என்று கேள்வி கேட்டார்.

இதற்கு சத்யராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

எஸ்.வி.சேகர் அதிமுகவைச் சேர்ந்தவர். எனவே எம்.ஜி.ஆர், அண்ணா பற்றியபடங்களை எடுத்தால் அரசு உதவி செய்யுமா என்று தான் அவர் கேட்டிருக்கவேண்டும். முதலில் தமிழக அரசின் உதவிக்கு நன்றி தெரிவித்து விட்டு மற்ற படங்கள்பற்றி அவர் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அதை விட்டு விட்டு மற்ற தலைவர்கள் குறித்து அவர் பேசியுள்ளது ஆச்சரியமாகஉள்ளது. சேகர் சொல்வது மாதிரி 70 லட்சம் ரூபாயில் எந்தப் படத்தையும் எடுக்கமுடியாது.

பெரியார் குறித்த படம் எடுப்பது நல்ல முயற்சி. இதைத் தடுக்கும் வகையில் பேசுவது,முயற்சிப்பது தவறானது என்றார் சத்யராஜ்.

Read more about: sathyaraj condemns sv sekar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil