ஹீரோ .. ஹீரோ ..

By Staff

கடலோரக் கவிதைகள், வேதம் புதிது படத்திற்குப் பிறகு சத்யராஜும், பாரதிராஜாவும் மீண்டும் இணைந்துபணியாற்ற உள்ளார்கள்.

வித்தியாசமான வில்லனாக நடித்துத் துவம்சம் செய்து கொண்டிருந்த சத்யராஜ் பின்னர் ஹீரோவானார்.

ஆனாலும்முத்திரை பதிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த அவருக்கு கடலோரக் கவிதைகள் மூலம் பெரிய பிரேக்கொடுத்தார் பாரதிராஜா.

அதன் பிறகு இருவரும் சேர்ந்து வேதம் புதிது என்ற அட்டகாசமான படத்தைக் கொடுத்தார்கள்.

இப்போது இரு"தலை"களும் மீண்டும் இணையவுள்ளன.

பாரதிராஜா இயக்கவுள்ள தகப்பன்சாமி படத்தில் சத்யராஜ்தான் நாயகன்.

கடந்த சில வருடங்களாகவே இருவருக்கும் சொல்லிக் கொள்ளும்படியாக படங்கள் எதுவும் இல்லை.

மகனை முன்னிலைப்படுத்தி பாரதிராஜா எடுத்த தாஜ்மஹால், கடல்பூக்கள், ஈர நிலம் ஆகிய படங்களும், இவரதுபாணிக்கு ஒத்து வராத தமிழ்ச்செல்வன் ஐ.ஏ.எஸ்., கண்களால் கைது செய் போன்ற படங்களும் பெரும்தோல்வியைத் தழுவின.

அதேபோல் நக்கல், நையாண்டி கலந்த வேடங்கள் மூலம் பெயர் பெற்ற சத்யராஜூம், மாறன், மிலிட்டரி,விவரமான ஆளு ஆகிய மாமூல் படங்களில் நடித்து பெயர் இழந்தார்.

இப்போது அடிதடி படம் ஓரளவு ஓடியதால்,வரிசையாக சில வாய்ப்புகள் வந்து சற்று தெம்பாக இருக்கிறார்.

இந்நிலையில் தான் பாரதிராஜாவும், சத்யராஜூம் இணைகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X