அய்யோ சாமி முடியல.. வார் 2 படத்தை ஜூனியர் என்டிஆர் கிட்ட இருந்து காப்பாத்துங்க.. டிரெண்டாகும் ட்ரோல்!

ஹைதராபாத்: வார் 2 படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே டோலிவுட்டில் நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையேயான சண்டை பயங்கரமாக வெடித்துள்ளது. விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டை தான் எப்போதுமே ட்விட்டரில் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும். ஆனால், விஜய் அரசியலுக்கு வந்த பின்னர், அதெல்லாம் ரொம்பவே அடங்கி விட்டது.

ஆண்டு இறுதியில் அதிகமான ஹாஷ்டேக் விஜய் பற்றி ரசிகர்கள் போட்ட சண்டையாகவே இருக்கும். டோலிவுட் திரையுலகம் தற்போது பாக்ஸ் ஆபீஸில் கொடிகட்டி பறக்கும் நிலையில், அங்கே உள்ள ஹீரோக்களின் ஃபேன் வார் தான் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

SaveWar2FromNTR hashtag trending nationwide

ஜூனியர் என்டிஆர் முதன்முதலில் பாலிவுட்டில் நடிக்கிறார் என்றதும் சப்போர்ட் செய்யாமல் ராம் சரண் மற்றும் மகேஷ் பாபு ரசிகர்கள் வார் 2 படத்தை எப்படியாவது ஜூனியர் என்டிஆரிடம் இருந்து காப்பாற்றுங்கள் என ட்ரோல் செய்து #SaveWar2FromNTR ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

வார் 2 டிரைலர் ரிலீஸ்: அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள இன்னொரு தேசப்பற்று படமான வார் 2 படத்தின் டிரைலர் இன்று வெளியானது. பாலிவுட்டில் ஷாருக்கான், ஹ்ரித்திக் ரோஷன், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன் என எல்லாருமே தொடர்ந்து விஜயகாந்த் ரேஞ்சுக்கு நாட்டை காப்பாற்றவும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடாவும் கடுமையாக உழைத்து வருகின்றனர். இந்த படத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் எதற்காக மோதிக் கொள்கின்றனர் என்பது தான் கதை போல டிரைலர் உருவான நிலையில் அதுதொடர்பான ஏகப்பட்ட ட்ரோல்கள் வெளியாகி வருகின்றன.

ஜூனியர் என்டிஆர் கிட்ட இருந்து காப்பாத்துங்க: வார் 2 படத்தின் டீசர் வந்ததில் இருந்தே படத்தை கியாரா அத்வானி தான் காப்பாற்ற வேண்டும் என்றும் ஜூனியர் என்டிஆர் ரியாக்‌ஷன் மற்றும் ஆக்‌ஷன் சீன் எல்லாம் நம்பும்படியாகவே இல்லை என ட்ரோல்கள் குவிந்தன. இன்று வெளியான டிரைலரை பார்த்துவிட்டு விமானத்தின் மீது நின்றுக் கொண்டு துப்பாக்கி சுடும் வீரரை அசால்ட்டாக காலாலே எட்டி உதைப்பதும், ஜூனியர் என்டிஆர் பிடித்திருக்கும் கயிற்றை வீரர் ஒருவர் அறுத்து விட அப்பவும் அவர் திரும்ப வந்து அடிப்பாரே என பங்கம் பண்ணி வருகின்றனர். #SaveWar2FromNTR ஹாஷ்டேக்கை என்டிஆர் ஹேட்டர்கள் டிரெண்ட் செய்ய பதிலுக்கு அவரது ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X