நம்ம ஆர்யாவா?: சயீஷா அம்மா சொல்வதை நம்பவும் முடியல, நம்பாமல் இருக்கவும் முடியலயே
Recommended Video

சென்னை: ஆர்யா பற்றி புது விஷயத்தை தெரிவித்துள்ளார் அவரின் வருங்கால மாமியார் ஷஹீன்.
நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சயீஷாவுக்கும் அடுத்த மாதம் 10ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. இது காதல் திருமணம் என்று நினைக்கப்பட்ட நிலையில் பெரியவர்கள் பார்த்து முடிவு செய்தது என்று சயீஷாவின் அம்மா தெரிவித்தார்.
காதலோ, பெரியவர்கள் பார்த்து செய்வதோ ஆர்யாவுக்கு திருமணம் நடக்கப் போகிறது என்று அவரின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

ஆர்யா
ஆர்யா என்றாலே ஜாலியான ஆள் என்று தான் அனைவருக்கும் தெரியும். படங்களில் மட்டும் அல்ல நிஜத்திலும் ஆர்யா சரியான வாலு, கலாய் பார்ட்டி என்று நினைத்தவர்களுக்கு ஷஹீன் தெரிவித்த விஷயம் அதிர்ச்சி அளித்துள்ளது.

சீரியஸ்
ஆர்யா படங்களில் இருப்பது போன்று இல்லாமல் நிஜத்தில் ரொம்பவே சீரியஸான ஆள் என்று ஷஹீன் தெரிவித்துள்ளார். நம்ம ஆர்யாவா, சீரியஸான ஆளா, நம்புற மாதிரி இல்லையே. சரி, வருங்கால மாமியார் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்.

சயீஷா அம்மா
திருமணத்திற்கு முன்பே சயீஷாவின் அம்மா ஆர்யாவின் புகழ் பாடத் துவங்கிவிட்டார். கடவுள் அனுப்பி வைத்தவர் ஆர்யா என்று அவர் நம்புகிறார். இப்படி ஒரு நல்ல மாமியார் கிடைப்பதற்கு ஆர்யா கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

வயது வித்தியாசம்
ஆர்யாவுக்கும், சயீஷாவுக்கும் இடையே 17 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது. மனம் ஒத்துப் போனால் வயது வித்தியாசம் எல்லாம் பெரிய விஷயம் இல்லை. நீங்கள் தைரியமாக திருமணம் செய்யுங்கள் ஆர்யா என்று ரசிகர்கள் ஊக்குவிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











